25.05.2022 புதன்கிழமை அன்று மாலை 06.00 மணியளவில் *கலை இலக்கிய பெருமன்றத்தின்* தூத்துக்குடி மாநகர குழுசார்பாக முதலாம் கூட்டம் போல்டன்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. க விழாவி்ல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வருகைப் புரிந்த முன்னாள் கல்வியியல் பேராசிரியர் தோழர் முனைவர் ந இரவீந்திரன் அவர்கள் கலந்த கொண்டு 'இலங்கையின் தற்போதைய சூழல்' என்ற தலைப்பில் பேசினார்..
இக்கூட்டத்திற்கு தலைமையேற்று நகரக்குழுவின் தலைவர் மாடசாமி அவர்கள் நடத்தினார். வரவேற்புரையை மன்றத்தின் நகரக்குழு செயலர் சொ பிரபாகரன் நிகழ்த்த, அதன் செயற்குழு உறுப்பினர் சுந்தர் காந்தி முனைவர் ரவீந்திரன் அவர்களைக் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
உரையின் போது ரவீந்திரன் அவர்கள் தற்போது நடந்த இலங்கை போராட்டம் என்பது மக்கள் எழுச்சி என்று கூறமுடியாது என்றும், அது ஊடகங்கள் நாட்டின் சுயசார்பு தன்மையை இழக்க வைக்கும் முறையிலும், ஆதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வைக்கும் வகையிலும், தகவல்களை தணிக்கை செய்து பரப்பியதின் விளைவு என்று கூறினார். ஆகவேதான் இப்போராட்டத்தின் பின்புலத்தில் எந்த அரசியல் தலைமையும், அரசியல் கட்சிகளும் ஈடுபடவில்லை என்றும் விளக்கினார்.. நமது சமூகத்தில் எந்த மேலாதிக்க சக்திக்கும் அடிபணியாமல், சமத்துவத்தைப் பேணுவதின் மூலம்தான் மக்களின் பொது நன்மையைப் பேண முடியும் என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏதாவது ஒரு கேள்வி இருந்தது, அனைவரும் உரையை உள்வாங்கி உள்ளார்கள் என்பதற்கும், சிறந்த விவாதம் நடந்தது என்பதற்கும் எடுத்துக் காட்டாய் இருந்தது.
பின்னர் கட்சியின் மாநகரச் செயலர் தோழர் ஞானசேகர் அவர்கள் முனைவர் இரவீந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். கட்சியின் மாவட்ட பொறுப்பு செயலர் தோழர் கரும்பன் அவர்கள் மன்றம் இதுமாதிரி பல கூட்டங்களை நடத்தி, சிறந்த கருத்துகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமென கூறினார்.. மன்றத்தின் மாவட்ட தலைவர் அருட்சகோதரி எழிலரசி அவர்கள் நன்றி கூற, கூட்டம் இனிமையாக முடிவுற்றது...
No comments:
Post a Comment