-கரவைதாசன்-
நாயா மரி அட்ஸ் அவர்களின் சொந்த மகனை இழந்த அனுபவத்தில் எழுதப்பட்ட "மரணம் உன்னிடமிருந்து எதையாவது எடுத்துக்கொண்டு எதனை திருப்பித் தந்தது" என்ற அனுபவ சிறு கதையினை படித்துக் கொண்டிருந்தேன். கவிதையின் லயத்தில் அமைந்திருக்கும் அவரின் மொழி நடைக்குள் அமிழ்ந்து சாவும் வாழ்வின் ஒரு பகுதியே என்ற புதிர் அவிழ்புக்குள் பயணிப்பது ஒரு புரிதலைத் தந்திருந்தது.
அவர் மொழியில் புத்தகத்தில் குந்தியிருந்த வரிகள்
”ஒருமுறை நான் கர்ப்பமாக இருந்தபோது
எனக்குள் இருக்கும் குழந்தை புலிக்குட்டி என்று கனவு கண்டேன். அப்படியே அவன் பிறந்தபோது
வெளிர் பழுப்பு நிற கண்கள் மற்றும் தங்க நிற தோல் கொண்ட விளையாட்டுத்தனமான,
மென்மையான ஆனால் செல்லம்
கொண்டவனாக இருந்தான். அவன் பசிய காட்டில் நடந்தான், காட்டின்
பசுமையை விரும்பிக்கொண்டே ஆனால் சிங்கம் போல் நிமிர்ந்தான். எனினும் புலிகளின்
தோலைப் போன்றே நிறமுடைய அவனுடைய
மயிர்களில் ஒளி தெறித்து மினுமினுப்பதைப் பார்த்தேன். அவன் தனியாக நடந்தான். அவன்
ஏன் தனியாக இருக்கிறான் என்பது அவனுக்கு புரியவில்லை. நான் கனவு கண்டதுபோல் அவனிடம்
புலியின் சாயலே உள்ளது. ஆனாலும் அவன் நிமிர்ந்த நடையுடனே காட்டுக்குள் மறைந்தான்.”
விஷயம் என்னவென்றால், சிறந்த புத்தகங்கள் பெரும்பாலும் ஒருவரின் இதயத்தை உடைத்து விடுகின்றன. அதை படைப்பாளி விரும்பலாம், இது படைப்பாளி மீதோ அல்லது படைப்பின்மீதோ உள்ளும் புறமுமாக பச்சாதாபத்தை ஏற்படுத்த கூடும். எதுவாயினும் சிறந்த புத்தகங்கள் தன்னையும் பிறரையும் புத்திசாலி ஆக்கிக்கொண்டே இருக்கின்றன.
உடைந்து போதல் என்பது இயற்கையானது Breaking is natural.
No comments:
Post a Comment