Sunday, August 16, 2015

என் மனதில் இன்றும் நிறைந்து நிற்கும் துணிச்சல் மிக்க மாணவி

-சி.மௌனகுரு-

பறை பற்றி இப்போது பலர் பேசுகிறார்கள்
இங்கு.பெண்கள் சேர்ந்து செய்த பறை முழக்கம்
ஒன்றையும் நான் இணையத் தளத்திலும் பார்த்தேன்

மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
இப் பறை வத்தியத்தை நாம் கிழக்குப் பல்கலைக் கழகத்தில்
1996இல் அறிமுகம் செய்தோம்

.இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர்.
எமது உலக நாடக தின விழாவினை பறை முழக்கத்தோடு ஆரம்பித்தோம்.
அது முதல் படி
.களுதாவளையிலிருந்து ஆனைக்குட்டி தலைமையில் ஒரு குழு வந்து இதனச் செய்தது
இணையத் தளங்கள் சிலவற்றில் வரும் படம் அதுதான்
இவரை இங்கு கூட்டிவந்தவர் களுதவளையச் சேர்ந்தவரும்
இன்று விரிவுரையாளராயிருப்பவருமான 
அன்றைய எமது மாணவன் சிவரத்தினம்

அவரோடு சேர்ந்து எனக்கு மிகுந்தவலதுகரமாக நின்றவர்.பாலசுகுமார்
உதவியாக இருந்தவர் ஜெயசங்கர்
முதன் முதலில் பறை தூக்கி அடித்த பல்கலைக் கழக விரிவுரையாளர் பாலசுமாரே
.அதனால் அவர் பெருமை பெற்றார்
.மாணாக்கருக்கு ஒரு வ்ழிகாட்டியுமானார்.
ஒவ்வொரு ஆண்டும் பறைமேளக் கூத்துடந்தான் வட்டக் களரியில் நாடக விழா ஆரம்பமாகும்.
பின்னால் இந்தப் பறையை அவர்களைக்கொண்டு மாணாக்கருக்குப் பழக்கினோம்.
ஆரம்பத்தில் பறை பழக மாணவர்கள் தயக்கம் காட்டிய வேளைகளில் நாங்கள் அவர்களுக்கு
தமிழ் மரபிலும் தமிழ் இசை மரபிலும்
பறையின் இடம் பற்றி வரலாற்று
விளக்கமளித்ததோடு.

பின் தங்கிய நிலையிலிருந்த பறைவாத்தியம் இன்று
தமிழகத்தில் முன்வந்த நிலையையும்
அதற்கான காரணங்களையும் கூறி
ஒரு தத்துவார்த்த பலம் அளித்தோம்.

விரும்பிச் சேர்ந்தோர் பலர்,விருப்பமின்றிச் சேர்ந்தோர் பலர்
அப்படிப் பயின்ற அப்பறையை பின்னர் நாடக விழாக்களில் பயன் படுத்தினோம்
நுண்கலைத் துறை வழங்கும் அதி உயர் விருதான தலைக்கோல் விருதினை பறை மேளக் கலைஞர் பரசுரமனுக்கு அளித்துக் கவுரவம் செய்தோம்
நாமும் அதனால் கவுரவம் அடைந்தோம்
அவ்வண்னம் பழகிய எமது மாணவர்கள் சிலர் இன்று இங்கு விரிவுரையாளர்களாக இருக்கிறார்கள். (மோகனதாசன் சந்திர குமார்,)
பின்னாளில் நாம் ஒரு இன்னிய அணியை உருவாக்கினோம்.
மட்டக் களப்பின் சகல தோல் இசைக்கருவிகளையும் உள்ளடக்கிய அவ் இன்னிய அணியில்
பறை பிரதனமான வாத்தியமாக அமைந்தது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரண்டு இஸ்ஸ்லாமிய மணவர்கள்
குறிப்பிடத்தக்கவர்கள்

அழகாக தோல் வாத்தியங்கள் வாசிப்பார்கள்
பலத்த எதிர்ப்புகள் மத்தியில் நாம் இதனச் சவாலாக ஏற்றுச் 
செய்தோம் என்பதனை அங்கு அப்போது கல்வி கற்றோரும் பங்கு கொண்டோரும் மாத்திரமே அறிவர்.

மிகுந்த போராட்டத்தின் பின் அதனைக் கிழக்குப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்கான
முன்னணி வாத்தியமாக வரச் செய்தோம்

.இதற்கு எமக்குப் பலர்
உதவியாக இருந்தனர்,உற்சாகமூட்டினர்

இப்போது அங்குள்ள உள்ள பலருக்கு இது தெரிவதில்லை
மாணவிகள் பறை வாசிக்க வரத் தயங்கிய வேளயில்
துணிந்து பறை\தூக்க முன் வந்தவர்தான் 
சுகன்யா.

அவளுடைய அந்தத் துணிவு
இன்றளவும் என் மனதில்
மலையாக நிறைத்து நிற்கிறது

அவளுக்கு இடது புறத்தில் மத்தாளத்துடன் செல்பவர்தான் அக்கரைப்பற்றைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய மாணவர் சுஹைப்
மணவர்களே நீங்கள் என் மனதில் நிற்கிறீர்கள்

No comments: