Thursday, March 19, 2015

சங்கப் படலை - கன்பொல்லை- வரலாற்றுக் குறிப்புகள்.

-கரவைதாசன் -
புத்தம் சரணம் கச்சாமி..............
பானாதி பாதா வேரமணி சிக்கா பதம் சமாதி யாமி.........
வண்ண கந்த குணோ பேதங் ஏ தங்க குசும சந்ததி..............
சுகந்தங் சீதலங்கப்பங் வசந்த மரணங் சுகங்..........
சுகந்தி காய வதனம் மணந்த குண கந்தினம்................
நாகவல்லி தழு பேதம்...............
நமாமி புத்தம் குணசாகரந்தம்.......
இதிபிசோ பகவா புரிச சம்ம சாரதி................
போன்ற பாளி மொழியினால சுலோக சட்டங்களினால் (காதா)
இலங்கையில் பெளத்த மதத்தின் சங்கப்படலை உருவாக்கம் செய்யப் பட்டடுள்ளது.  இச்சங்கப் படலை பல்வேறுபட்டகாலங்களில் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இலங்கைதீவில் ஒவ்வொரு பகுதியிலும்  திறக்கப்பட்டும் மூடப்பட்டும் சில சந்தர்ப்பங்களில் அகற்றப்படுவதற்கும் எத்தணிப்புகள் நடந்துள்ளன. சிலவேளை சில ஆயிரம் வருடங்கள் முன்பாக, சிலவேளை சில நூற்றாண்டுகள் முன்பாக, சிலவேளை சில பத்து வருடங்கள் முன்பாக  வரலாற்றின் போக்கில் பதிவுகளும் அகழ்வுத் தடயங்களிலும் புனைவுகளிலும் கூட நிறுத்தம் கொள்கிறது.


உலகில் அநாதியாய் நதிக்கரைகளில் மனிதசமூகம் குழுமங்கொண்டபோது நாமும்   காதல் கொள்ளவும், கலவி செய்யவும், ஆடவும் பாடவும், மழைவருமுன் அறியவும், வேட்டையாடவும், நெருப்பு கொண்டு உணவு சமைக்கவும், திசையறிந்து கடலில் பயணம் செய்யவும், வேளாண்மை செய்யவும்,  நோயறிந்து பிணிதீர்க்கவும், முரசு கொட்டி செய்தி பரப்பவும், முறை சொல்ல உறவும்  (காதலன்- காதலி, தலைவன்- தலைவி  மாமன்-மச்சாள்), இறந்தவரை புதைக்க இடு காடும், காடாத்து செய்ய எங்களில் புலையனும், (புரோகிதநல்ல) அவற்றை அடுத்த சந்ததிக்கு கடத்திச்செல்ல எங்கள் கற் குகைகளிலே பதித்து வைக்க ஓவியனும், மெல்ல மெல்ல நகர்ந்து சென்று நகரமும், அரசும் நாடும் (இயக்கர் (கல்யாணி), நாகர் (நாகநாடு)  எங்கள் தீவிலும்  இருந்தன. முதலில் விருந்தினாராயும் பின் வணிகராயும் அதன் பின் எதிரிகளாய் படையெடுத்தும் எங்கள் தீவிற்கு பலர் வந்து சென்றனர். பலமுறை தோற்று போயினர். சிலமுறை வென்று நின்றனர். கருத்தைக் கடத்த பேசுவதற்கு எங்களிடம் எலு  மொழி இருந்தது. வேலுக்கு வேலனும் சூலத்துக்கு வைரவரும் சிவனும் எங்களிடம் இருந்தன. முந்தி இருந்தே எங்கள் பெண்களிடமும்  அதிகாரம் இருந்தன. அதன் வழி கொற்றவை வழிபாடும் எங்கள் தேசமெங்கும் வியாபித்திருந்தது. எங்கள் மூத்த சிவன் (மூட்ட சிவ)  வழிவந்த சிவன் மைந்தன்  தேவ நம்பிய தீசன் மிகுந்தலைக்குன்றில் சம்பிராட் அசோகனின் மகன் மகிந்தபிட்சுவை  சந்தித்ததும் மகாமேகவனத்தை சங்கம் வளர்க்க அவர் கொடையாகக் கொடுத்ததும்   பின் சங்கமித்தாபிக்குனி வெள்ளரசம் கிளை கொண்டு வந்து அன்பு உபதேசம் செய்ததும் பெளத்தம் தீவெங்கும் மலர வழி செய்தது. சில ஆயிரம் வருடங்களுக்குள்  நடந்ததாய் இதற்கு வரைபுகள் உண்டு.

இயக்கரும், நாகரும் எங்கள் தீவின் முதாதையர். இவர்களை திராவிடரின் மூலம் என்போர் சிலர், மொங்கோலியரின் மூலம் என்றார் சிலர். அலைந்து, திரிந்து, சிதைந்து, சேர்ந்து மிசிர குலமாகி சிங்களவராகினர். பாலியும், எலுவும், தமிழும், மலையாளமும், துளுவும், சமஸ்கிருதமும் சேர்ந்து சிங்கள மொழி தோன்றிச்சு. மிசிர குலம் தோன்றி சிங்கள மொழி தோன்ற முன் தீவெங்கும்  பேசப்பட்ட எலு அல்லது ஈழு என்ற ஈழ பாசை தீவெங்கும் பேசப்பட்டது.  அம்மொழிச் சொல்லில் நின்ற ஊர்ப்பெயர்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. கன்பொல்லை, கொற்றாவத்தை, சங்கலாவத்தை, சூராவத்தை இப்படி தொடரும் இவை சிங்களப் பெயர்கள் அல்ல அவற்றுக்கு முந்திய வழக்கிலிருந்த எலு மொழிச் பெயர்கள்.
.
இதில் சில பத்துவருடங்களுக்கு முன்பாக  இலங்கையின் வடபகுதியில் கன்பொல்லைக் கிராமத்தில்  தமிழ் பெளத்த சங்கடப்பைடலை திறக்கப்பட்ட வரலாற்றின்  சில குறிப்புகளை குறித்து வைப்பதே இவ்வெழுத்தின் நோக்கம். ஒரு காலப்புள்ளியில்  இடதுசாரிகள் செறிந்து வாழ்ந்த கிராமத்தில்,  மாக்சியத்தின் எந்த விறைப்பான பக்கங்களையும் குறிக்காது இலகுவாக கடந்து செல்வது தற்காலிகமாக எனக்கு செளரிகமானதும் தேவையானதுமாக படுகிறது. 
      
ஐம்பதுகளில் இலங்கையில் உருக்கொண்ட பொதுவுடமைக் கட்சியின் வழிநடத்தலில் இலங்கையின் வடகோடியில் சாதியத்திற்கு எதிராகவும் சாதியத்தின் பேரால் கொண்ட தீண்டமைக்கெதிராகவும் பல்வேறு முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டன. குக்கிராமங்களில் சாதிவெறியர்களால் தாழ்த்தப் பட்டமக்கள் (பஞ்சமர்கள்)  மிகவும் கொடுமையான முறையில் தாக்கப்படும் ஒவ்வொருதடைவையும் பதிலுக்கு சாதிவெறியர்கள்  யாழ்ப்பாணம் நகருக்கு வரும்போது ஆரியகுளச்சந்தியில் வைத்து அவர்களுக்கு  பதிலடி கொடுப்பதும் தொடர்ந்தது. இலங்கை பொதுவுடைமைக் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவரான எம்.சி. சுப்பிரமணியம் அவர்களால் உருவாக்கப்பட்ட எழிச்சிமிகு வாலிபர்கள் அங்கே ஸ்தாபனப்பட்டிருந்த சன்மார்க்க வாலிபர் சங்கத்தினால் அப்பிராந்தியத்தில்  அரசியல் விழிப்போடு இருந்தனர்.  ஒவ்வொரு தாக்குதலாலும்  அடிக்கடி சண்டையும் சச்சரவும் மிகுந்த ஒரு இடமாக சந்தி காணப்பட்டது. இதன் அருகில்த்தான் ஆரியர்குளத்து நாகவிகாரை அமைந்துள்ளது. இதனை அவதானித்து வந்த அந்த விகாரையின் விகாரதிபதி வண.கடவத்த நந்தராம தேரர் (இவர் பிறப்பால் மாத்தளை நகரைச் சேர்ந்தவர்)  அவ்விடத்து  இளைஞர்களை அணிகி குழப்பத்துக்கான காரணங்களை அறிய முற்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்து தமிழ்ச் சைவ வேளாளர்களின் சாதிய ஒடுக்குமுறையால் கோணிப்போய் மானிட எலும்புகளே இன்னொரு மானிடத்தின்  உணவாகும் துருப்பிடித்துப் போனதொரு தமிழ் இழிவுகள் தான் அவற்றிக்கான கரணம் எனக் கண்டறிந்தார். இளைஞர்களைப் பார்த்து என்னை ஒருதடவை வந்து சந்தியுங்கள். என்னால் முடிந்தளவு உதவுகிறேன் எனச்சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.   
தொடரும்........ 


No comments: