Monday, March 30, 2015
Tuesday, March 24, 2015
பெண்கள் மற்றும் அரசியல் கல்விசார் ஆலோசகர் தோழி நளினியுடனான நேர்காணல்
துணிவாகவும், தைரியமாகவும் கதைக்கிற பெண்கள் வேண்டும். வெறும் வாய் காட்டுகிற பெண்கள் வேண்டாம்!
Thursday, March 19, 2015
சங்கப் படலை - கன்பொல்லை- வரலாற்றுக் குறிப்புகள்.
-கரவைதாசன் -
புத்தம் சரணம்
கச்சாமி..............
பானாதி பாதா வேரமணி
சிக்கா பதம் சமாதி யாமி.........
வண்ண கந்த குணோ பேதங்
ஏ தங்க குசும சந்ததி..............
சுகந்தங்
சீதலங்கப்பங் வசந்த மரணங் சுகங்..........
சுகந்தி காய வதனம்
மணந்த குண கந்தினம்................
நாகவல்லி தழு
பேதம்...............
நமாமி புத்தம்
குணசாகரந்தம்.......
இதிபிசோ பகவா புரிச
சம்ம சாரதி................
போன்ற பாளி மொழியினால
சுலோக சட்டங்களினால் (காதா)
இலங்கையில் பெளத்த
மதத்தின் சங்கப்படலை உருவாக்கம் செய்யப் பட்டடுள்ளது. இச்சங்கப் படலை பல்வேறுபட்டகாலங்களில் பல்வேறுபட்ட
சந்தர்ப்பங்களில் இலங்கைதீவில் ஒவ்வொரு பகுதியிலும் திறக்கப்பட்டும் மூடப்பட்டும் சில
சந்தர்ப்பங்களில் அகற்றப்படுவதற்கும் எத்தணிப்புகள் நடந்துள்ளன. சிலவேளை சில
ஆயிரம் வருடங்கள் முன்பாக, சிலவேளை சில நூற்றாண்டுகள் முன்பாக, சிலவேளை சில பத்து
வருடங்கள் முன்பாக வரலாற்றின் போக்கில்
பதிவுகளும் அகழ்வுத் தடயங்களிலும் புனைவுகளிலும் கூட நிறுத்தம் கொள்கிறது.
Labels:
karavaithasan,
கரவைதாசன்,
கன்பொல்லை
Monday, March 16, 2015
மீரா பாரதியின் பால்- பாலியல், காதல்- காமம், பெண்- பெண்ணியம்
-ஸ்ரீ ரஞ்சனி விஜயேந்திரா-
ஆரோக்கியமான எதிர்கொள்ளலுக்கு ஒரு சிறு பங்களிப்பாவது செய்யவேண்டும் என்ற நல்லதொரு நோக்கத்துடன் பால்-பாலியல், காதல்-காமம், பெண்- பெண்ணியம் என்ற இந்த நூலை,
மீரா பாரதி அவர்கள் அனைத்துப் பெண்களுக்கும் Shirley க்கும் சமர்ப்பணமாக வெளியிட்டிருக்கின்றார்.
பெண் – பெண்ணியம் என்பது பற்றிய எனது பார்வையை, இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, நடிகை என பல்வேறு பரிமாணங்களில் செயற்படும், Lena Dunhamன் கூற்றுடன் ஆரம்பிக்க விரும்புகின்றேன். “Feminism isn’t a dirty word. We don’ think women should take over the planet, raise our young on our own or eliminate men from the picture.”
பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குமுறை என்பவற்றுக்கே பெண்ணியம் எதிரானதேயன்றி அது ஆண்களுக்கு எதிரானது அல்ல. ஆதிக்கமற்ற ஒரு உலகத்தை உருவாக்கவே அது முனைகின்றது,
பொருளாதாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் கலாசாரரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமைகளும் சம வாய்ப்புக்களும் இருக்க வேண்டும் என்பதை வலுயுறுத்துவதே, பெண்ணியம் ஆகும்
Labels:
மீரா பாரதி,
ஸ்ரீ ரஞ்சனி விஜயேந்திரா
Monday, March 09, 2015
கொடுந்துயர் இரட்டாய் அவர்களும் மறைந்தார்.
-கரவைதாசன் -
யாழ் காரைநகர் வடக்கு வலந்தலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர் வைரமுத்து இரட்டாய் அவர்கள் சென்ற மாதம் காலமாகிவிட்டதாக செய்தி கிடைத்தது. ஈழமண் தமிழன் வாழும் முறையில் அமாவாசையாகவே துருவப்பட்டிருக்கின்றது. தம் அளவுக்கேனும் கைக்கெட்டியவரை கொள்ளியினை கையில் ஏந்தி சமத்துவத்துக்கான ஒளியினை ஐம்பதுகளில் விளிம்புநிலை மாந்தருக்கு பாச்சியவர்களில் இவர் முனைப்பானவர். காலம் முழுவதும் இடதுசாரியச் சிந்தனையோடு வாழ்ந்தவர். ஜனவேகம் எனும் இடதுசாரிய ஏட்டின் ஆசிரியராக இருந்து செயற்பட்டவர். இப்பத்திரிகை ஜனவேகய என சிங்களத்திலும் வெளி வந்தது. வடபகுதியில் தமிழ்ப் பெளத்தசங்க உருவாக்கத்தினூடு பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் 1966ம் ஆண்டில் ஐந்து பாடசாலைகளின் உருவாக்கத்துக்கு செயலாளராக இருந்து பணிசெய்தவர். சமூகமேம்பாட்டுக்கான உழைப்பில் பிரமச்சாரியாகவே வாழ்ந்து தன் வாழ்வினை சமூகத்தொண்டுக்கே ஆகுதியாக்கியுள்ளார். சிறந்த கணித ஆசிரியர். ஆங்கில மொழித்திறன் கொண்ட வல்லாளன். எனது தந்தையாரின் நெருக்கத்துக்கு உரிய நண்பர். இவரின் விரல் பிடித்து வலம் வந்த நாட்கள். நீக்கமற நெஞ்சில் நிறைந்தே கிடக்கிறது. மூளைப்பிசிறில் பொறிதட்டும் நினைவுத் தீயில் கண்கள் குளமாகிறது. ஆசிரியருக்கு நிறைவான அஞ்சலிகள்.
Subscribe to:
Posts (Atom)