Wednesday, September 12, 2012

கூடங்குளம் நிகழ்வுகள் தொடர்பாக கூட்டறிக்கை


 கூடங்குளம் நிகழ்வுகள் தொடர்பாக  எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் கலைஞர்கள் செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை.
’’கடந்த ஓராண்டாக அறவழியில் நடந்துகொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. சுதந்திர இந்தியா சந்தித்த மக்கள் திரள் போராட்டங்களில் முக்கியமான ஒன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்திய தேசத்தின் ஆன்மாவை நோக்கி வலிமையான கேள்விகளை எழுப்பிய இந்தப் போராட்டம் இன்று அதிகாரத்தின் வன்கரங்களால் நசுக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் விடுதலையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் போராடும் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது தார்மீக கடமை என்று நம்புகிறோம்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்களாகிய நாங்கள் இடிந்தகரை மக்களுடன் நிற்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.  மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் அரசாங்கம் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் ஜனநாயக விழுமியங்களை காற்றில் பறக்கவிட்டு, அறவழியில் நின்று போராடிய  இடிந்தகரை மக்கள் மீது இன்று மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் சர்வாதிகார அடக்குமுறையை ஏவியிருப்பதும் , கடந்த செப்டம்பர் 10 அன்று நடந்த முற்றுகைப் போராட்டத்தில் அந்த மக்கள் மீது கண்ணீர்ப் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் அராஜகமும், குலசேகரப்பட்டினத்தில் அந்தோணி என்கிற மீனவர் பலியாகக் காரணமான துப்பாக்கிச்சூடும்  கடும் கண்டனத்துக்குரியது.
போராடும் மக்களின் ஒருங்கிணைப்பாளராகிய சுப உதயகுமாரையும் போராட்டக்குழுவினரையும்  மனித உரிமைகளுக்கு புறம்பான முறையில் காவல்துறை நடத்துவதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பெண்களின் அதிகபட்ச பங்கேற்புடன் நடந்துவரும் இந்தப் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் இருப்பதை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் ஆணாதிக்கப் பேச்சுகளுக்கும் எங்களது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

தமிழக அரசும் இந்திய அரசும் இந்த அராஜகப் போக்கை உடனடியாகக் கைவிட்டு போராடும் மக்களின் தார்மீக உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்க முன்வரவேண்டும் என்றும், இடிந்தகரை பகுதி மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைக்கும் வகையில், காவல்துறையினர் நடத்திவரும் அத்துமீறல்களையும், தாக்குதல்களையும் கைவிடவேண்டும் என்றும்  மக்களின் கோரிக்கையை ஏற்று அணு உலையில் எரிபொருள் நிரப்பும் முயற்சிகளைக் கைவிட்டு, அணு உலையை மூடவேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.”

(மேற்கண்ட குறிப்புடன் ஒப்புதல் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் உங்கள் ஒப்புதல், பெயர், எழுத்தாளரா கலைஞரா பத்திரிகையாளரா என்கிற தகவல் ஆகியவற்றை தயவுசெய்து jkavinmalar@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும்)

நன்றி!

இப்படிக்கு

யூமா வாசுகி, எழுத்தாளர்
பெருந்தேவி, எழுத்தாளர்
கோணங்கி, எழுத்தாளர்
இன்குலாப், கவிஞர்
ம.மதிவண்ணன், கவிஞர்
அஜயன் பாலா, எழுத்தாளர்
வண்ணதாசன் (கல்யாண்ஜி), எழுத்தாளர்
குட்டி ரேவதி, கவிஞர்
பிரபஞ்சன், எழுத்தாளர்
பா.ஜெயப்பிரகாசம், எழுத்தாளர்
சு.மு.முகமது, கவிஞர், ஆம்பூர்
அ.வெண்ணிலா, கவிஞர்
மு.முருகேஷ், கவிஞர்
கு.உமாதேவி, கவிஞர்
இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர்
வெய்யில், கவிஞர்
பாலை நிலவன், எழுத்தாளர்
அழகிய பெரியவன், எழுத்தாளர்
கணேசகுமாரன், எழுத்தாளர்
வ.கீதா, எழுத்தாளர்
விஷ்ணுபுரம் சரவணன், எழுத்தாளர்
யாழன் ஆதி, எழுத்தாளர்
லிபி ஆரண்யா, எழுத்தாளர்
வே.பாபு, கவிஞர்
அ.மார்க்ஸ், எழுத்தாளர்
யுகபாரதி, கவிஞர் - பாடலாசிரியர்
சுகுணா திவாகர், எழுத்தாளர், பத்திரிகையாளர்
மீனா, எழுத்தாளர்
மீனா கந்தசாமி, எழுத்தாளர்
ஜெகன், எழுத்தாளர், மதுரை,
நேசமித்திரன், கவிஞர்
ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர், மதுரை
பொன்.வாசுதேவன், கவிஞர்
பிரேமா ரேவதி, கவிஞர்
கவின் மலர், எழுத்தாளர், பத்திரிகையாளர்
கார்த்திகை பாண்டியன், எழுத்தாளர்
ஆழி.செந்திநாதன், ஆழி பதிப்பகம்
இசை, கவிஞர்
நீலகண்டன், கருப்புப்பிரதிகள் பதிப்பகம்
ஜெயராணி, எழுத்தாளர், பத்திரிகையாளர்
தி.பரமேசுவரி,எழுத்தாளர்
லஷ்மி சரவணகுமார், எழுத்தாளர்
நாஞ்சில் நாடன், எழுத்தாளர்
கவிதா முரளீதரன், எழுத்தாளர், பத்திரிகையாளர்
ஆளூர் ஷானவாஸ், எழுத்தாளர்
அரச.முருகுபாண்டியன், எழுத்தாளர்
ஓவியா, எழுத்தாளர்
லீனா மணிமேகலை, கவிஞர்
தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர்
மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர்
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், எழுத்தாளர், கோவை
சிபிச்செல்வன், கவிஞர்
தமிழ்நதி, கவிஞர்
பவுத்த அய்யனார், எழுத்தாளர்
முத்துமீனாள், எழுத்தாளர்,
சுதீர் செந்தில், கவிஞர்
சந்திரா, எழுத்தாளர்,
தேவிபாரதி, எழுத்தாளர்
சுகுமாரன், கவிஞர்
தமிழ்நாடன், கவிஞர், குவைத்
சேரன், கவிஞர், கனடா
தீபச்செல்வன், கவிஞர்
பா.வெங்கடேசன், எழுத்தாளர்
ஷோபாசக்தி, எழுத்தாளர், பிரான்ஸ்
கண்ணகன், கவிஞர்,
நலங்கிள்ளி, கவிஞர்
உமாசக்தி, கவிஞர்
இளம்பிறை, கவிஞர்
செல்மா பிரியதர்ஷன், கவிஞர்,
யவனிகா ஸ்ரீராம், கவிஞர்
தமயந்தி, எழுத்தாளர்
ரத்திகா, கவிஞர்
பாஸ்கர் சக்தி, எழுத்தாளர்
இரா.எட்வின், எழுத்தாளர்
கோ.மோகனரங்கன், எழுத்தாளர்
ராஜன் குறை, எழுத்தாளர்
ஸ்வாதி சா.முகில், கவிஞர்
ஜமாலன், எழுத்தாளர்
தவ.சஜிதரன், எழுத்தாளர்/கவிஞர், லண்டன்
மேகவண்ணன், எழுத்தாளர்
அருண்மொழிவர்மன், மொழிபெயர்ப்பாளர்
ஆ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர்
சயந்தன், எழுத்தாளர், ஸ்விட்சர்லாந்து
அ.ராமசாமி, எழுத்தாளர்
சீனிமோகன், எழுத்தாளர்
அ.வெற்றிவேல், எழுத்தாளர், சவூதி

முருகபூபதி, மணல்மகுடி நாடகக்குழு
கி.பார்த்திபராஜா, நாடகவியலாளர்
ஸ்ரீஜித் சுந்தரம், கட்டியக்காரி நாடகக்குழு
இயக்குநர் ராம்,
இயக்குநர் வெற்றிமாறன்,
ஆர்.பி.அமுதன், ஆவணப்பட இயக்குநர்
ஆர்.ஆர்.சீனிவாசன், ஆவணப்பட இயக்குநர்
வின்செண்ட் பால், புகைப்படக் கலைஞர்
புகழேந்தி, ஓவியர்
ஜெயச்சந்திர ஹாஸ்மி, குறும்பட இயக்குநர்,
ஹாசிப் கான், ஓவியர்
லிவிங் ஸ்மைல் வித்யா, அரங்கக் கலைஞர்
கருணா பிரசாத், நாடகவியலாளர்
ஏஞ்சல் கிளாடி, அரங்கக் கலைஞர்
தீபக், திரைத்துறை
ராம் அருண்ராஜ், திரைத்துறை,
அபிஷேக் பாலா, திரைத்துறை
தாமிரா, திரைப்பட இயக்குநர் / எழுத்தாளர்
தம்பிசோழன், கூத்துப்பட்டறை, அரங்கக் கலைஞர்

ஞானி, பத்திரிகையாளர்,
அருள் எழிலன், பத்திரிகையாளர்,
யுவகிருஷ்ணா, பத்திரிகையாளர்
ஆரா, பத்திரிகையாளர்
அதிஷா, பத்திரிகையாளர்
ஷண். சரவணகுமார், பத்திரிகையாளர்
பாரதிதம்பி, பத்திரிகையாளர்
நீரை மகேந்திரன்,பத்திரிகையாளர்
எஸ்.பாலபாரதி, எழுத்தாளர், பத்திரிகையாளர்
காவேரி மாணிக்கம், பத்திரிகையாளர்
டி.ஐ.அரவிந்தன், பத்திரிகையாளர்
எஸ்.கோபாலகிருஷ்ணன், பத்திரிகையாளர்
கார்மல் இக்னேஷியஸ், பத்திரிகையாளர்
கானகன், பத்திரிகையாளர்,
லூர்துராஜ், காட்சி ஊடகவியலாளர்
சரவணன் (உண்மைத்தமிழன்), பத்திரிகையாளர்,
ராஜேஷ் சுந்தரம், காட்சி ஊடகவியலாளர், புதுடெல்லி
தியாகச் செம்மல், காட்சி ஊடகவியலாளர்
அருள் இனியன், பத்திரிகையாளர்
கே.கே.மகேஷ், பத்திரிகையாளர்
ராஜீவ்காந்தி, பத்திரிகையாளர்
திருமேனி சரவணன், காட்சி ஊடகவியலாளர்
ஜி.கௌதம், காட்சி ஊடகவியலாளர்
ஷபீர் மொய்தீன், ஊடகவியலாளர்
சிவா, ஊடகவியலாளர்
அன்பழகன், ஊடகவியலாளர்
சிவநேசன், ஊடகவியலாளர்
ப்ரவீன் பாஸ்கர்,ஊடகவியலாளர்
திவ்யா, ஊடகவியலாளர்
ரூபினேஷ், ஊடகவியலாளர்
குமார், ஊடகவியலாளர்
பொ.அறிவழகன், செய்தியாளர், கம்பம்

லஷ்மணன், Dalit Intellectual Collective
யோ.திருவள்ளுவர், மனித உரிமை செயற்பாட்டாளர்
சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

ம. அலெக்ஸ் அம்புரோஸ் , சாப்ட்வேர் இஞ்சினியர்
விவேக் பாபு, மாணவர், ஸ்வீடிஷ் பல்கலைக்கழகம்
ஸ்வேதா அனிருத், தகவல்தொழில்நுட்பத்துறை
பார்த்திபன், பொறியாளர்
பாலா, தகவல் தொழில்நுட்பத்துறை
அப்துல்லா அஹ்மத், தகவல்தொழில்நுட்பத்துறை
இளையராஜா, இணையதள வடிவமைப்பாளர்

No comments: