கொல்கத்தாவில்
நடைபெற்ற CNN-IBN இன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க
முதல்வர் மமதா பானர்ஜி, பல்கலைக்கழக மாணவிகளின் கேள்விகளில் அதிருப்தி அடைந்து
நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்ற நிகழ்வு
இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக
மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார்
மமதா பானர்ஜி. அப்போது ஜாதாவ்பூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாநிலத்தில்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறதே என கேள்வி எழுப்பினார்.
மற்றொருவர்
கார்டூன் வரைந்தற்காக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ராவை கைது செய்தது ஏன் என
கேள்வி எழுப்பினார். அது கார்டூன் அல்ல. சைபர் கிரைம். என்னை கொலை செய்வதற்கான சதி
முயற்சி. குறித்த பேராசிரியர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஏஜெண்டுக்களில் ஒருவர்.
அவர்
அதை 60 பேருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். கடந்த தேர்தலின் பின்னர்
மார்க்ஸிஸ்ட் கட்சி, 1000 ற்கு மேற்பட்ட சீ.டி க்களை வெளியிட்டு என்னை
அவமானப்படுத்தியது. மாவோயிஸ்டுக்களும் - மார்க்ஸிட் கட்சியும் ஒன்றாக இணைந்து
செயற்படுகின்றன என மமதா பதில் அளித்தார்.
அத்துடன்
திடீரென கோபமடைந்த அவர், ஏன் எல்லோரும் மாவோயிஸ்டுக்கள் தொடர்பான கேள்விகளையே
எழுப்புகிறீர்கள். மாநிலத்தில் பேசுவதற்கு வேறு எந்த விடயமும் இல்லையா? வேறு
பல்கலைக்கழக மாணவர்களை இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லையா? என்றார்.
நீங்கள்
மாவோயிஸ்டு இயக்கத்தை சேந்தவரா என குறித்த மாணவியை பார்த்து பதில் கேள்வி
எழுப்பினார். என்னால் மாவோயிஸ்டுக்கள் - மற்றும் மார்க்சிஸ்ட் தொடர்பான
கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. நீங்கள் மாவோயிஸ்டு மாணவர்கள்.
இங்கு
மாவோயிஸ்டுக்கள் பலர் உள்ளனர். என்னால் மவோயிஸ்டுக்களுகு பதில் கூறமுடியாது என
சொல்லிவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே கோபத்தில் வெளியேறிவிட்டார்.
முதன்முறையாக
மமதா பானர்ஜி ஊடகம் ஒன்றின் முன்னிலையில் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வெடுவெடுப்பாக
பேசிவிட்டு நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியது மேற்குவங்க மூத்த அரசியல்
தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற CNN-IBN இன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, பல்கலைக்கழக மாணவிகளின் கேள்விகளில் அதிருப்தி அடைந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நன்றி:eutamilar.eu
No comments:
Post a Comment