Sunday, September 11, 2011

சுவன் அவ்கன்(Svend Auken)

நீண்டதொரு இடைவெளிக்குப் பின் நெஞ்சைதொடும் ஆவணப் படம் ஒன்றினை பார்த்த நிறைவினை மனம் எட்டியது. பல்வேறு வகைகளில் பல்வேறு கருவுலங்களை முன்வைத்து ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன. மையக் கருவை ஒட்டி செய்திப் படங்கள் (news reals) வனவிலங்குகள் பற்றிய படங்கள் (wildlife) கலைத்தொழில் பற்றிய படங்கள் (Arts and Crafts) வரலாறு மற்றும் நினைவிடங்கள் பற்றிய படங்கள் (History & monuments) அரசியலார்கள்  (Political leaders& States Man) எனப் பல்வேறு வகைப்படும். 
இவற்றில்  அரசியலாளர்வகையைச் சேர்ந்தஆவணப் படம் ஒன்று

டென்மார்க்கின் நன்கறியப்பட்ட ஆவணப் பட இயக்குநரான அனா ரிகிட்சே விவெல் அவர்களால் மூன்று வருடங்கள் அவரது கணவர் முன்னாள் சுற்று சூழல் அமைச்சர் சுவன் ஆர்கன் (Svend Auken) அவர்களின் அடியை தொடச்சியாகப் பின் தொடர்ந்து அவரது இறுதிக் காலங்களில் அவரது அரசியல் செயல்பாடுகள் ,அவரது சமகால அரசியல் தோழர்களுடன் கொண்ட உறவுகள், அவரது ஆங்கில மொழியிலுள்ள பேச்சு வன்மை, அவரது கட்சி பற்றிய கொள்கை விளக்கம் யாவும் மிகத் தெளிவாகவே காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இவ்வுலகின் சுற்று சூழலைப் பாதுகாக்க தனக்  கேற்பட்ட புற்று நோயுடனும் நகரம் நகரமாகவும்  நாடு நாடாகவும் சென்று பரப்புரை செய்வது நெஞ்சை நெகிழவைக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் சொல்லுவார் " பயங்கர வாதத்தினை விடவும் பயங்கரமானது சூழல் மாசு அடைவது என்பதனை புரிந்து கொள்ளுங்கள் " என. சுமார் 1மணி 50 மணி வரை நீளும் இப் படத்தில் அதிக நேரங்கள் சமையல் அறையினுள்ளேயே பதிவாகியுள்ளன. அலுவலகத்திற்கு  தினமும் சயிக்கிளினிலேயே சென்றுவருவது முதல், தனது உணவினை தானே தயாரிப்பது வரை, தனது எட்டுப் பேரக் குழந்தைகளுடன் ஓய்வுப் பொழுதினை இயல்பாக சந்தோசமாக கழிக்கும் அவரது எளிமையான வாழ்வு மிகவும் பொறுப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று இப்படம்  டென்மார்க்கின் 68 நகரங்களில் திரையிடப்படுகின்றது. கட்டாயம் டென்மார்க்கில் வாழும் ஒவ்வொரு பிரசையும் நேரம் ஒதிக்கிச்சென்று பார்க்க வேண்டிய ஆவணம்.

-கரவைதாசன்-








No comments: