ஜீவா -85 இன்றைய பார்வையில்
-மேமன் கவி -
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா இன்று 85 வது பிறந்த நாளை காண்கிறார். 85 வயது என்பது ஒரு தனிநபரின் ஆயுளை பொறுத்த வரை ஒரு சாதனை என்றாலும், டொமினிக் ஜீவா என்ற படைப்பாளியின் 85 வயது என்பது முக்கியத்துவம் பெறுவதற்கு காரணங்கள் பன்முகப்பட்டவை.
1. அவர் சார்ந்திருக்கும் சமூகம். அச்சமூக கட்டமைப்பு எதிர் கொண்ட ஒடுக்கு முறை, அதன் அதன் காரணமாக அச்சமூகம் இயக்கரீதியாக தரித்துக் கொண்ட போராட்ட பாத்திரம், அப்போராட்ட பாத்திரத்திற்கான அச்சமூக இயக்கம் சார்ந்திருந்த கருத்தியல் நிலை.
2. 40 வருடங்களுக்கு மேலாக தனிமனிதனாக ஒரு கலை இலக்கிய சிறுசஞ்சிகை நடத்தி வருகின்றமை.
கலை இலக்கியவாதிகளின் வரலாறுகளை நாம் எடுத்து பார்தோமானால், அவர்கள் சமூகத்திற்கு ஏதாவது சொல்லவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாகவும், கலை இலக்கியத்தின் மீதான தணியாத ஆர்வத்தின் கராணமாகவும் கலை இலக்கிய்த்துறை மீதான பிடிமானத்தின் காரணமாக அத்துறையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள். அதேவேளை அரசியல்,சமூக போராட்ட இயக்கங்களில் ஈடுபட்டு, அவையின் தேவையின் காரணமாக கலை இலக்கியத்துறையில் ஈடுபட்டவர்களும் இருக்கிறார்கள். இலங்கை தமிழ் சூழலில் அவ்வாறான பல படைப்பாளிகளை நாம் இனங்காட்டலாம். அத்தகையவர்களில் ஒருவர்தான் டொமினிக் ஜீவா அவர்கள்.
ஜீவா நான் சார்ந்நிருக்கும் சமூகம் எதிர் கொண்ட ஒடுக்கு முறை எதிரான இயக்க செயற்படாட்டின் ஊடாக, அப்போராட்டத்திற்கான வன்மையான ஆயுதமாக கலை இலக்கியம் அமைய முடியும் என்பதை அறிந்துக் கொண்ட பொழுதுதான் அவர் கலை இலக்கியத்துறையில் நுழைகிறார். அவரது அப்பணியின் முதற் கட்ட்மாக படைப்பாக பணியில் ஈடுபடுகிறார். அப்பொழுதுதான் அத்தகைய போராட்ட சூழலுக்கான வன்மையான ஆயுதமாக பயன்படும் கலை இலக்கியத்திற்கு ஒரு பிரசுர களம் தேவை என உணர்கின்ற பொழுதுதான் அவரது தனித முயற்சினால் மல்லிகை என்ற கலை இலக்கிய சஞ்சிகை தோற்றம் பெறுகிறது.
ஈழந்து சிறுசஞ்சிகை வரலாற்றை எடுத்துக் கொண்டால், பல்வேறு கலை இலக்கிய இயக்கங்கள் வழியாகவும், பல சஞ்சிகை வெளிவந்து இன்னும் பேசப்பட்டு கொண்டிருக்கின்றன. அதே காலகட்ட்த்தில் தனிமனித முயற்சிகளாக பல சிறுசஞ்சிகைகள் வெளிவந்துள்ளதையும் இங்கு நினைவுப்படுத்த வேண்டி இருக்கிறது. ஆனால், பொதுவாகவே அச்சிறுசஞ்சிகை முயற்சிகள் அவை இயக்க ரீதியாக வெளிவந்திருப்பினும் சரி, தனிமனித முயற்சிகளாக வந்திருப்பினும் சரி, சிறுசஞ்சிகைகள நடத்துவதில் உள்ள சிரம மங்கள் என்பது வெறுமனே பெருளாதாரத்துடன் மட்டுமே சம்பந்தவைபட்டவை அல்ல. அதற்கு அப்பால், அவ்வியக்கங்களும் சரி, அத்தனிமனிதர்களும் சரி, அவையோ அவர்களோ கொண்டிருக்கும் கருத்துநிலையும், அக்கருத்து நிலைகளின் சமூக பெறுமானம், தேவை, அவை சந்திக்கும் நெருக்கடிகளும்தான் தான் அச்சஞ்சிகைகளின் ஆயுளை நிர்ணயம் செய்து இருக்கின்றன.
ஆனால் ஜீவாஅவர்களை பொறுத்தவரை. பிற்காலத்தில் அவர் சார்ந்திருந்த அரசியல் சமூக போராட்ட இயக்கத்தையும். அவர் சார்ந்திருந்த கருத்தியலையும் மேவி, ஈழத்து சமூக அரசியல் சூழலில் பல்வேறு நெருக்கடிகள், மாற்றங்கள் நிகழ்ந்த பொழுதும், அர்சார்ந்நிருந்த அரசியல் சமூக போராட்ட இயக்கத்தினதும், அவர் சார்ந்திருந்த கருத்தியலினதும் தேவையை நிலை நாட்டுவதற்கான, தக்க வைப்பதற்கான உணர்வுபூர்வமான நீட்சியினை அசையாத நம்பிக்கையுடன் மல்லிகையை 46 வருடங்களாக மேலாக, தனிமனிதனாக நின்று வெணிக்கொணர்ந்து-அதற்கான படைப்பாளிகளின் வட்டத்தினரை உருவாக்கி அடையாளப்படுத்தி அந்த நீட்சியினை தக்க வைத்திருக்கும் சாதனைதான்- அவரது சமகாலத்தவர்களிடமிருந்து அவரை பிரித்துக் காட்டும் முக்கியத்துவமாக இருக்கிறது.
ஜீவா வின் இத்தகைய முக்கியத்துவத்தை அறிந்துக் கொண்டவர்கள் யார்?
அவரது சமகாலத்தவர்களும்,அம்முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொண்ட ஜீவாவுக்கு அடுத்து வந்த ஒரு தலைமுறையினரும்தான்.
இவ்விரு அணியினரும் ஜீவா பற்றி பேச தருணங்கள் வந்த பொழுதெலாம் 46 வருடங்களாக தனிமனித நிலை நின்று, பல சொந்த நலன்களை அர்ப்பணித்து ஒரு சிறுசஞ்சிகை சாதனையாளர் என்றுதான் அடையாளப்படுத்தி , அழுத்திச் சொல்லி வந்துள்ளார்கள். ஆனால், டொமினிக் ஜீவா என்ற படைப்பாக்க பங்களிப்பை இன்று பேசுவதே பேசுவதே இல்லை.(இக்காகட்டத்தில் கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைகழ மட்ட்த்தில் டொமினிக் ஜீவா என்ற படைப்பாளி பற்றி அவர்தம் படைப்புகளை பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன் என்பதும் இங்க குறிப்பிட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், ஆனாலும் அந்த ஆய்வுகளின் பற்றிய அறிதல் என்பது கல்வித்துறை சார்ந்தவருகளுடன் அடங்கி விடுகிறது என்பதால் அதனை பற்றி இங்கு விரிவாக பேசவில்லை)
அதாவது ஜீவா என்ற மனிதர் தன் சொந்த நலன்க்ளை தியாகம் செய்து 46 வருடங்களாக மல்லிகை என்ற சிறுசஞ்சிகையை நடத்தி வந்துள்ளார் என்று சொல்வதில் இன்னுமொரு சொல்லாடல் சேர்ந்து கொள்ளபடவேண்டும் என்பதே எனது வேண்டுகோளாக இருக்கிறது. டொமினிக் ஜீவா என்ற தனிமனிதர் நன் சொந்த நலன்களை மட்டுமே தியாகம் செய்து 46வருடங்களாக வருடங்களாக இந்த மல்லிகை கொண்டு வரவில்லை அத்தோடு சேர்த்து டொமினிக் ஜீவா என்ற படைப்பாளியையும் தியாகம் கொடுத்துதான் இந்த மல்லிகை நடத்தி வந்துள்ளார் என்பது எடுத்து சொல்லப்படவேண்டும் அதாவது இரட்டை அர்ப்பணிப்பு. ஒன்று சொந்த நலன் அடுத்து டொமினிக் ஜீவா என்ற படைப்பாளி. அதுசம்பந்தமான அதாவது மல்லிகை என்ற சிறுசஞ்சிகை க்காக டொமினிக் ஜீவா என்ற படைப்பாளியை என தியாகம் கொடுத்தீர்கள் என ஜீவா அவரிடம் கேட்டால், அவரது பிரபலமான ஒரு மேற்கோளால் எமது வாயை அடைத்து விடுவார். ‘’ ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறமுடியும் என்பதாக.
ஆக அவ்விரு அணியினர் ஜீவாவின் படைப்பாக்க முயற்சிகளை பற்றி முக்கியத்துவம் கொடுத்து இன்று பேசவில்லை என்பதற்காக அவர்களையும் குறை கூற முடியாது. ஏனெனில் ஜீவா அவர்கள் நீண்ட படைபாக்கங்களை தரவில்லை. அது உண்மை என்றாலும், குறைந்த பட்சம் ஜீவாவின் கால படைப்பாக்க பங்களிப்பை பற்றி பேசவந்து இருக்க்லாம் அல்லவா?
சரி, இந்த நிலைமைகளின் காரணமாக ஏற்பட்ட் பக்க் விளைவு என்ன்?
இன்றைய இளையத் தலைமுறை கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள் மத்தியில்,டொமினிக் ஜீவா என்பது 46 வருடங்களாக தனிமனி நிலை நின்று சொந்த நலன்களை தியாகம் செய்து மல்லிகை என்ற சிறுசஞ்சிகையின் ஆசிரியர். அதாவது டொமினிக் ஜீவா என்பவர் ஒரு சிறுசஞ்சிகையாளர் அவ்வளவுதான். அத்தகைய ஒருபடிம மே இளையத் தலைமுறையினரிடம் பதிந்து விட்ட்து. ஆனால் ஜீவா அவர்களின் படைப்பாக்க பங்களிப்புடன் இணைத்து பேச பட்டிருந்தால், இன்றை இளையத் தலைமுறை கலை இலக்கிய செயற்பாட்டளர்களுக்கு, மத்தியில் டொமினிக் ஜீவா ஒரு படைப்பாளியாக அறிமுகமாகி இருப்பார்.அத்தோடு அந்த இளையத் தலைமுறையினரும் அவர் தம் படைப்பாக முயற்சிகளின் தரம், அதற்கு தே வையான வழிகாட்டல் போன்றவற்றை, டொமினிக் ஜீவா என்ற படைப்பாளியின் ஆக்க இலக்கிய இயக்க வளர்ச்சி வழியாக பெற்றிருப்பார்கள்.
உதாரணத்திற்கு, ஒன்று சொல்லாம். இலங்கை சாகித்திய மண்டல பரிசை ப்ற்று க் கொண்ட முதலாவது தமிழ் சிறுகதைத் தொகுப்பு டொமினிக் ஜீவாவின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான தண்ணீரும் கண்ணீரும் ஆகும். இதனை நான் சாகித்திய பரிசு என்பதற்காக கூறவில்லை. மாறக. டொமினிக் ஜீவா என்ற படைப்பாளி அன்று பெற்றிருந்த செல்வாக்கை, எடுத்துக்காட்டும் ஒருதகவலாக கூறுகிறேன்..
(தொடரும்1
No comments:
Post a Comment