Thursday, February 24, 2011

நினைவில் ரிச்சர்ட் டி சொய்சா


ரிச்சர்ட் டி சொய்சா
குதறி எறியப்பட்ட ஆளுமையின் புன்னகை
-சந்துஷ்-

இருபது வருடங்களுக்கு முன்னதாக இருக்கும்.
அம்மா நாங்கள் .இங்கே இருப்பது உங்களுக்கு இடைஞ்சலாக இருந்தால் இன்றைக்கே போய்விடுகிறௌம்என்று தலையைக் குனிந்து கொண்டு தன் தாயிடம் அந்தத் தாடி இளைஞன் சொல்வது யசோராவய(துயரத்தின் ஓசை) என்ற  தொலைக்காட்சித் தொடரில். அதே முகம் மாலை ஆங்கிலச்செய்திகளை வாசித்துவிட்டுத் தன் வசிகரச் சிரிப்பை மலரவிடும் ஒவ்வொருமுறையூம் அந்தக் குரலுக்கும்; புன்னகைக்கும் சொந்தமான முகம் ஒரு செய்தி வாசிப்பவனினுடையதாக நினைவின் பதிவுகளில்  மறந்தோ போயிருக்கக்கூடும்.
திடிரென்று வீட்டுவாசலில் கிறீச்சிட்டு நிற்கும் வாகனம். அதிலிருந்து வீட்டிற்குள் குதிக்கும் அரசினதோ ஆயூதக்குழுக்களினதோ அடியாட்கள். அச்சம்.இழுத்துச் செல்லப்படுதல். இவையெல்லாம் யுத்தப் பிரதேசத்துத் தமிழ் பேசும் மனமொன்றிற்குப் பரிச்சயமான நிகழ்வுகள்.
அந்த அச்சத்திற்கும் வன்கொடுமைக்கும் காரணமான அதே அரசிற்கும் அந்தப் பயங்கர ஆயயுதங்களுக்கும் அச்சத்தை வரவழைக்கும் ஒரு மேடை நாடகத்தை தலைநகரின் ஒரு  மூலையில்  அந்தச் செய்தி வாசிப்பவன் இயக்கித் தன் குழுவினருடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்ததையும் அதற்காக அப்போதைய அரசின் ஏவற்படைகளால் கடத்தப்பட்டுப் பின் பிணமாக மிதந்ததையயும் யுத்தப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் பெரிதாக அறிய நியாயமில்லை. செய்தி வாசித்தவனே செய்தியாகப் பேசப்பட்டு மறைந்து 2005பெப்ருவரியுடன் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன.
பட்டை தீட்டி வெட்டப்பட்ட ஒரு கல்லின் பல பக்கங்கள் வெளிச்சம் பட்டு ஒளி வீசுவது போல ரிச்சர்ட்டின் பல ஆளுமைகள் அவனது குறுகிய காலக் கலை வாழ்வினில் காணக்கிடக்கின்றன. அடக்கப்பட்டவர்களின் மனதில் சுவாலையாக எரிந்து கொண்டிருந்த எதிர்ப்பு அநீதிக்கெதிரான கொதிப்பு என்பன அவனது ஆளுமையின் பக்கங்களிற் பட்டுப் பல வண்ணங்களாக எரிந்தன. ஊடகங்களின் விமர்சகன்அறிவிப்பாளன். நாடக திரைப்பட நடிகன் இயக்குனன்.கவிஞன்.எழுத்தாளன்.ஊடகவியலாளன் என்று ஒவ்வொரு துறையிலும் அவனது தனித்த குரலும் மாற்றத்தைத் தேடும் முனைப்பும் வெளிப்பட்டது.
1990 பெப்ருவரியின் ஓரிரவில் ஆயுதந்தாங்கிய குழுவொன்றினால் வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டுஅடுத்த நாட்காலையில் கொழும்பிற்குத் தெற்காக 12 மைல் தொலைவிலுள்ள மொறட்டுவ கடற்கரையில் அவன் பிணமாக மிதந்த போது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அப்போது இலங்கையின் ஜனாதிபதியாகவிருந்த பிரேமதாசவை விமர்சித்து இவர்  யார் இவர்; என்ன செய்கிறார் என்ற  நாடகத்தை நெறிப்படுத்தியதுதான் ரிச்சர்டின் கொலைக்குக் காரணமெனச் சொல்லப்படுகிறது. இந்த நாடகத்தின் தயாரிப்பாளரான லக்ஷ்மன் பெரெரா கடத்தப்பட்டு இன்று வரை காணவில்லை.
கொலை நடந்து மூன்று மாதங்களின் பின் ரிச்சர்ட்டின் தாயார் மனோராணி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கின்றார்.அதில் தனது மகனைக் கடத்திச் சென்ற கொலையாளிகளில் ஒருவனைக் காண்கிறார். அவன் ஓரு உயர் பொலிஸ் அதிகாரி. உடனே தன் சட்டத்தரணி மூலம் வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்  உயர்நீதிமன்ற ஆணைக்குழுவிடம் விசாரிக்கிறார்ஆனால் சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு அடையாள அணிவகுப்புக்கூட நீதித் துறையால் ஒழுங்கு செய்துதரப்படவில்லைமாறாக அவருக்கும் அவரது சட்டத்தரணிக்குமாய்ச் சேர்த்துக் கொலை மிரட்டல்கள் தான் வந்தன. இது இலங்கையின் சுயாதீன ஊடகத்துறை தினமும் சந்திக்கும் அரசபயங்கர வாதத்தின் வெளித்தெரியாத இன்னுமொரு முகத்தைக் காட்டுகிறது.
தென்னிலங்கையின் 1988-90 காலப்பகுதியானது கொலைகளாலும் இரத்தத்தாலும் வாவியில் மிதந்த பிணங்களாலும் எழுதப்பட்டது. இலங்கையில் வடக்கு கிழக்கில் தமழ் பேசும் மக்களின் மேல் அரசு நடத்திய யுத்தத்தை  தென்னிலங்கை மக்களிற்கும் ஊடகங்களிற்கும் இரும்புத்திரை போட்டு மறைத்துக்கொண்டு தென்னிலங்கையில் கொலைகளை நிகழ்த்திய காலமதுஅரசுக்கு மட்டுமல்ல ஆயுதக்குழுவான ஜே.வி.பியினருக்கும் மாற்றுக்கருத்துக்கொண்ட புத்திஜீவிகளும் மனிதவுரிமைவாதிகளும் இடதுசாரிகளும் கலைஞர்களும் மாணவர்களும் பொது எதிரியாகத்தெரிந்து பலியெடுத்த நேரமது.
லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கிய யுகாந்தய (சகாப்த முடிவு) படத்தில் வரும் பணக்காரத் தொழிலதிபரின் மகன் இடதுசாரியாகிறான்.  தொழிலாளர்களுக்காகத் தன் தந்தையுடன் வாதிடுகிறான். தொழிற்சங்க அரசியலில் பங்குபற்ற அவன் முடிவெடுக்கும் நேரத்தில் வீடு அல்லது அரசியல் என்ற தந்தையின் கட்டளையில் அரசியலைத் தேர்ந்தெடுக்கிறான். சர்வதேச மாக்ஸியக்கட்சியின் நான்காம் அகில இலச்சினை பொருந்திய மாலையை அவன் அணிவதோடு அந்தப்படம் முடிகிறதுஅந்தப்படத்தில் மகனாக நடிக்கும் ரிச்சர்ட்டி சொய்சா யுகாந்தய மகன் பாத்திரத்தைப் போலவே உயர் மத்தியதர வர்க்கத்தைச் சோர்ந்தவர்தான். வானிலிருந்து உதிரும் கற்களில் ஓரு நட்சத்திரத்தை இனங்கானுதலைப்போல அவர் அறியப்படுவதன் காரணத்தைப் புரிந்து கொள்ள தென்னிலங்கைக் கலையுலகின் ஒரு பக்கத்தின் வரலாறு பின்புலமாய் உதவலாம்.
இலங்கையின் ஆங்கில அரங்கு 1940 களின் வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட போது அது கொழும்பைச் சுற்றியிருந்த ஆங்கிலம் பேசும் உயர்வர்க்கத்தினரிடை யிலேயே உருவானது. நிகழ்த்துபவர்களும் பார்வையாளர்களும் அதே வட்டத்தைச் சேந்தவர்களாகவிருந்தனர்அதன் ஆரம்ப கர்தாக்களில் முக்கியமானவர் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்ட லீன் லுடோவ்க் (Lyn  Ludowyk).

பல பிரபல ஜரோப்பிய நாடகங்கள்  அவரால் மேடையேற்றப்பட்டன. பேற்றௌல்ற் பிரெக்ற் போன்றௌரின் நாடகங்கள் இங்கிலாந்தில் மேடையேற்றப்படுவதற்கு முன்பாகவே இலங்கையில் இவரால் மேடையேற்றப்பட்டன.துரதிர்ஷ்டவசமாக கருத்தாழங்கொண்ட நாடகங்களுக்கும் பொழுது போக்கிற்கான நாடகங்களிற்கும் இடையிலான கோட்டை அவர் கிழித்த விதம் வேடிக்கையானது. பார்வையாளர்களின் கருத்தைப் பாதிக்கும் அரங்கைப் பொருத்தவரையில் ஜரோப்பிய நாடகங்களையூம் உள்ளுர் வாழ்வியலைச் சித்தரிப்பதற்கு நகைச்சுவை நாடகங்களையூம் அவர் நெறிப்படுத்தினார்.மறைந்த இலக்கிய மற்றும்நாடக விமர்சகர் ரெஜி சிரிவர்தன ஓருமுறை சொன்னது போல லுடோவ்க்கின் அரங்கானது வாழ்வை அரங்கில் தேடுவதாயின் ஷேக்ஸ்பியரிடமோ இப்சனிடமோ அல்லது பிரெக்டிடமோ செல்லவேண்டும்.உள்ளுர் வாழ்க்கை என்றால் நகைச்சுவைதத்துண்டுகளால் தொகுக்கப்பட்ட நாடகங்கள் மூலமே காட்ட வேண்டும் என்று அவர் நம்பிய ஒன்றைத் தன் பார்வையாளர்களையூம் நம்ப வைத்துக் கொண்டிருந்தார். அவரது H உழஅநள கசழஅ துயககயெ என்ற நாடகம் கூட சமூகக்குழுக்கள் பற்றிய அகவயப்பட்ட கற்பிதப்படுத்தல்களையூம் வகைமாதிரிபளையூம் வலியூறுத்தி நகைப்பை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.1905 இல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு ரயில் ஓடத்தொடங்கியதன் பின் தமிழர்களின் கொழும்பு நேக்கிய வருகையூம் இதனால் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட பரிவர்த்தனைகளையூம் பற்றிய  ஒரு குறிப்பிட்ட சமூகநோக்கின் பதிவாகவூம் இதைக் கொள்ளலாம்இலங்கையின் ஆங்கில அரங்கின் முன்னோடியான அவரால் பல நடிகைகளும் நடிகர்களும் உருவாகி பல தசாப்தங்கள் இலங்கை அரங்கியலில் பிரகாசித்தனர்.

60களின் பின் ஏர்னஸ்ட் மக்கின்டையர (Ernest Macintyre) வருகையூடன் ஆங்கில அரங்கு சில முக்கிய மாற்றங்களைக் கண்டது.அவர் தயாரித்து நெறிப்படுத்திய நாடகங்களும் மொழிபெயர்த்து இயக்கிய சர்வதேச நாடகங்களும் பாரவையாளர் பரப்பை அதிகமாக்கியது.அரசியல் நாடகம் சமூகநாடகம் மீதான ரசனையை அதிகமாக்குவதில் இவை பெரும்பங்காற்றின. சிங்கள ஆங்கில அரங்க உலகங்களுக்கிடையில் ஒரு அன்னியோன்ய சினேகம் உருவானதும் இக்காலத்தில் தான். இவரது The Education Of  Miss Asia


1970 இல் மக்கின்டையர் வெளிநாடு சென்ற பிறகு ஒரு தொய்வு  நிலை ஏற்பட்டது. 1983இல் இடம் பெற்ற இனக்கலவரமும் அதனைத் தொடர்ந்த மாற்றங்களும் பல கலைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறியமையூம் அரங்கின் பாரவையாளர்களையூம் பங்காளர்களையூம் குறைத்ததுபலர் ஒதுங்கிக் கொண்டனர்.ஜராங்கனி சேரசிங்க போன்றவர்கள் தமது திறமைகளை ஆங்கில அரங்கின் மிக நெருங்கிய தோழியான சிங்கள அரங்கினுடாக வெளிப்படுத்தலாயினர்.(இங்கு சிங்கள அரங்கு என்பது நகர் சார்ந்த கலைஞர்களின அரங்க வெளிப்பாடுகளையே குறிக்கிறது. கிராமம் சார்ந்த சிங்கள மொழி நாடகக்கலைக்கு வெறொரு மரபு உண்டு.இன்றைய சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் இந்த இரு போக்குகளும்; வெவ்வேறாகவூம் இணைந்தும் வெளிப்படுத்தப்படுவதைக் காணலாம்)
இங்கேதான் ரிச்சாரட் டி சொய்சா என்ற கலைஞனின் பங்பகளிப்பு முக்கியம் பெறுகிறது. மிகத்திறமையாக நெறியாள்கை செய்யப்பட்ட அவரது நாடகங்கள் காலத்தின் தேவை என்ற சவாலைத் துணிவுடன் எதிர்கொண்டன. சமூகம் மாற வேண்டும் என்பதில் அவருக்கிருந்த பேரவாவும் கலாச்சாரங்களுக்கும் வர்க்கங்களுக்குமிடையில் இருந்த மதில்களை கலையின் மூலம் தகர்ப்பதில் அவருக்கிருந்த ஆர்வமும் அவரை ஓரு தனித்துவமிக்க கலைஞனாக ஒளிர வைத்தது. அவர் பலவந்தமாக இவ்வுலகை விட்டு அழிக்கப்படும்வரை அது தொடர்ந்தது.
ரிச்சர்டின் மரணம் அவரது தாயார் மனோராணி சரவணமுத்துவை காணாமற் போனவர்களின் அன்னையர் துணைவியர் சகோதரிகளை அணிதிரட்டிய அமைப்பொன்றை உருவாக்க வழிவகுத்தது. 1988-90 காலப்பகுதியில் தென்னிலங்கையில் அடையாளமின்றிக் காணாமற்போன ஆயிரக்கணக்கானோருக்கு நீதி கேட்டு இந்த அமைப்பு நடத்திய தொடர்ச்சியான செயற்பாடுகள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன.
ரிச்சர்ட் கொல்லப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கழிந்த பின்னும் சுயாதீன ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்தும் அரசு என்ற நிறுவனத்தின் போக்குத் தொடர்கிறது.ஊடகவியலாளர்கள் மீதான அவமதிப்புக்கள் உளவியல் ரீதியிலான மிரட்டல்கள் ஊடக நிறுவனங்களைப் பணத்துக்கு வாங்க முயலுதல் தாக்குதல்களினால் பயமுறுத்தித் தமது கடடுப்பாட்டின் கீழ் ஊடகங்களை வைத்திருத்தல் எனப் பலவாறாக முகமூடியணிந்து வரும் கொலையாளியைப்போல அடக்குமுறை நடப்பது தெரியாமல் நடக்கிறது.
பல ஊடக நிறுவனங்கள் தனிப்பட்ட முதலாளிகளால் நிறுவப்படுவது கடந்த தசாப்தத்தில் நிகழ்ந்தது. வியாபாரிகளின் கள்ளச்சந்தை மூலம் கிடைக்கும்  பணம் இத்தகைய ஊடக நிறுவனங்களுக்கு  கொட்டபட்டு வருகிறதுமுப்பதிற்க்கும் மேற்பட்ட ஊடகவியலளர்கள் கொல்லப்படடிருப்பதும் ஊடகங்கள் ஆதிக்க சக்திகளின் கைகளில் தவிப்பதும் ரிச்சர்ட் டி சொய்சா தான் மறைந்த பதினைந்தாவது ஆண்டில் வாசிக்காமல் சொல்லும் செய்திகள்.

உயிர்மை (இந்தியா) ஏப்ரல் 2005

பின்னிணைப்பு
ரிச்சர்ட் டி சொய்சா பற்றிய இச்சிறுகுறிப்பு அவர் கொல்லப்பட்ட 15வது வருடத்தில் எழுதப்பட்டது. இற்றைக்கு 21 வருடங்களுக்கு முன் அவர் கொல்லப்பட்டார். இந்தக்கால இடைவெளியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை மாத்திரமல்ல இலங்கையில் மனித உரிமைகள் மாற்றுக்கருத்துக்கள் என்பவைக்கான சுயாதீன வெளியும் மார்க்கத்தை   கண்டு வருகிறது பொருளாதாரரீதியில் பின்தங்கிய நிலைக்குத்தள்ளப்பட்ட ஏனைய சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்களால்  உருவமைக்கப்பட்ட சுயாதீன சமூகத்திற்கன அடிப்படை இலங்கையில் இன்னமும் குற்றுயிராகவெனினும் இருக்கிறது. 1977 இல ஜே.ஆர்.ஜயவர்த்தன நடைமுறைப்படுத்த முயன்ற சிங்கப்பூரை முன்மாதிரியாகக் கொண்ட Lee Thesi தாராள சந்தைப் பொருளாதாரத்திற்குச் சார்பான தனது ஆட்சியை நிலை நிறுத்தும் தனது முயற்சியில் சற்றும் மனந்தளராத ஜயவர்த்த்ன வடக்கிலும் கிழக்கிலுமுள்ள தமிழ்பேசும் மக்கள் மீதான அடக்குமுறை மூலம் தனது அதிகாரத்தின் பிடியை இறுக்குவதற்கேதுவான பலவீனமான சுயாதீன சமூகமே குறிப்பாக வடக்கில் இருந்தது. அத்தகையதான ஓரு சுயாதீன சமூத்திற்கு முதுகெலும்பாக இருந்திருந்தக்கூடிய சமூகப்போராட்டங்கள் முக்கியமாக சாதியத்திற்கெதிரான போர்க்குணமிக்க போரட்டங்கள்  சாதிய மேலாதிக்கச் சிந்தனையாலும் அதன் அதிகாரத்தாலும் முடக்கப்பட்டடிருந்தன.சிங்களப் பேரினவாதத்திற்கெதிராகக் குரல் கொடுக்கும் தமிழ்த் தேசியச் சிந்தனையானது ஜனநாயகத்திற்கான அப்போரட்ங்களின் முடக்கத்தைப்பற்றியும் அதற்கான தனது பங்களிப்பைப் பற்றியும் கள்ள மௌனம் காத்து வருகிற ஓர்  அரசை விடவும் ஒரு  சமூகமானது சில வேளைகளில அச்சமூகத்திலுள்ள ஒடுக்கப்பட்டவர்களிற்கு எதிராக இயங்கும் எனப் பொருள்படுமபடியாக அம்பேத்கர் ஓரிடத்தில் எழுதுகிறார்.
1970 களில் சமூகக் கிளர்ச்சியாக எழுந்த ஜே.வி.பியின் தலைமையானது தம்முடன் சித்தாந்த ரீதியில் ஒற்றுமையைக் கொண்டிருந்த அரசியற் சக்திகளால்; முன்னெடுக்கப்பட்டிருந்த சாதியததிற்கெதிரான போராட்டங்களை குறுகிய இனவாதப் பிரபல்யவாதம் தலைமை மோகம் போன்ற காரணங்களுக்காக  தம்முடைய  போராட்டங்களுடன்   இணைத்துக் கொள்ளவில்ல.  மலையகமும் இது போலத் துண்டிக்கப்பட்டிருந்தது; அவ்வாறு நிகழ்ந்திருந்தால இலங்கையின் வரலாறு வேறு திசையில்  பயணித்திருக்கக்கூடும்.
1989-90 காலப்பகுதியில் தென்னிலங்கையில் நிகழ்ந்த 60 000 த்திற்கும் மேற்பட்ட படுகொலைகளுக்கும் மனிதவுரிமை மீறல்களுக்கும்எதிராக சர்வதேச அளவில் பிரச்சாரம் மேற்கொண்துடன் நீதி கேட்டு கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செய்ததடன் ரிச்சர்ட் டி சொய்சாவின் கொலைக்கெதிராக நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட அரசியல்வாதி இன்று சிங்கபூரின் Lee Thesis

தொலைநோக்கில மக்களின் நலன்களுக்குத் எதிரானதாகச் செயற்படும் வர்த்தக மயப்படுத்தப்பட்ட ஊடகங்கள் தம்மையறியாமலேயே பகிரங்க உரையாடலைச்(Public Speach) சாத்திhயமாக்குகின்றன இதனால் சுயாதீனமான் அபிப்பிராயங்கள் பரிமாறப்படுவது சாத்தியமாகிறது
விரும்பப்படும்  அரசனைவிடவூம் அச்சமடைய வைக்கும் அரசனே சிறந்த ஆட்சியாளன் என்ற 16 ஆம் நுhற்றாண்டின் மாக்கியவல்லியின் அறிவுரையை புதிய மன்னர்களும் பின்பற்றுகின்றனர். இதற்கு அச்சமடைய வைக்கும் கொலைகளும் கடத்தல்களும் அவசியமாகின்றன.
அதிகாரத்திலுள்ளவர்ளுக்குப பிடிக்காத(அல்லது புரியாத) ஓரு நாடகம் ஓரு நேர்மையான கட்டுரை ஒரு ஓவியம் இவையெல்லாமம் அதனைப் படைப்பவர்களின் மரண சாசனங்களாக மாறி வருகின்றன’.
90 இல் ரிச்சர்டின் நாடகத்திலிருந்து 2010 இல் பிரசன்ன விதானகேயின் தேபிட்டோ நாடகம் வரை அதிகாரத்தின் அடாவடித்தனங்களைச் சந்திக்கின்றன.



.

No comments: