Monday, June 09, 2014

அணிந்துரை: கோப்பிக்காலவரலாறு 1824 - 1893 (கண்டிச்சீமையிலே)

ஒரு சமூகம் முன்னோக்கிச் செல்லும்போது சற்று பின்னோக்கியும் பார்க்க வேண்டும். தான் இதுவரை காலமும் நடந்து வந்த பாதை; கடந்து வந்த பாதை; அதில் எதிர்நோக்கிய இன்னல்கள்; அவலங்கள் பற்றிய புரிந்துணர்வு என்பன முன்னோக்கிய நடைக்கு உதவும் என்பதால் தான் சமூக வரலாறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வரலாறு என்பதற்கு சுருக்கமான வரைவிலக்கணம் கடந்த காலம் பற்றிய அறிவுத்தொகுதி என்பதாகும். இந்தியாவின் பாதகமான சமூக, பொருளாதார நிலைமைகளால் அங்கிருந்து தள்ளப்பட்ட (கதண்ட ஊச்ஞிவணிணூ) அதேவேளையில், இலங்கையில் திறக்கப்பட்ட பெருந்தோட்டப் பொருளாதாரம் வழங்கிய வாய்ப்புகளாலும் ஈர்க்கப்பட்ட (கதடூடூ ஊச்ஞிவணிணூ) தமிழகத்து பின் தங்கிய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் மலையகப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்தனர். ஆரம்ப கால கோப்பித் தோட்ட வாழ்க்கையில் அவர்கள் பட்டபாடுகள், எதிர்நோக்கிய அவலங்கள், இன்னல்கள், அவமானங்கள், பிரச்சினைகள் என்பன பற்றிய ஆதாரங்களின் உதவியோடு எளிமையான தமிழ் நடையில் தனது மக்கள் பற்றிய அனுதாப உணர்வுடன் கவிஞரும் சட்டத்தரணியுமான இரா.சடகோபன் ஓர் அருமையான, பாராட்டத்தகுந்த நூலை எழுதி வழங்கியுள்ளார்.

இலங்கை வாழ் இந்திய, வம்சாவழியினர் பற்றி ஏற்கெனவே வெளிவந்த சில நூல்கள் (எனது இலங்கை  இந்தியர் வரலாறு (1989) உட்பட இவ்விடயம் பற்றி இந்த அளவுக்கு ஆழமாக  நோக்கவில்லை. ஆயினும் பேராசிரியர்களான பஸ்தியாம்பிள்ளை, கிங்ஸ்லி டி சில்வா ஆகியோரும் திரு. பாலசிங்கமும் தமது ஆங்கில மொழியிலான ஆய்வேடுகளில் இவ்விடயத்துக்கு ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருந்தனர். அவர்களுடைய அம்மூன்று அத்தியாயங்கள்கூட சடகோபன் எடுத்துக் காட்டும் கோப்பிகால  அவலங்களை இந்த அளவுக்கு எடுத்துக்காட்டவில்லை. ஏனெனில் பஸ்தியாம்பிள்ளை பிரதானமாக  பார்ன்ஸ் தேசாதிபதி பற்றியும் பாலசிங்கம் பிரௌண்றிக் தேசாதிபதி பற்றியும் கிங்ஸ்லி.சில்வா  மிஷனரி அமைப்புகள் பற்றியுமே தமது ஆய்வேடுகளை தயாரித்திருந்தனர். எவ்வாறாயினும் அவர்களுடைய மூன்று அத்தியாயங்களும் ஆங்கில நாட்டில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் துணையுடன் பெருந்தோட்ட மக்களின் அவலங்களைத் தெளிவுபடுத்தின. சடகோபனின் இந்நூல் இம்மக்களின் அவலங்களை நுணுக்கமாக நோக்கும் ஒரு ஆய்வு (ஆடிஞிணூணிண்வதஞீதூ) எனலாம். இத்தகைய ஒரு நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதன் முறை என்பது இதன் சிறப்பம்சம்.

இவ்வகையில் இந்நூலை எழுதிய இரா.சடகோபன் இந்நூலை தொடர்ச்சியாக அத்தியாயங்களாக வெளியிட்ட சூரியகாந்தி பத்திரிகை இந்நூலை தற்போது வெளியிட்டுள்ள வீரகேசரி நிறுவனத்தார் அனைவரும் மலையக சமூகத்தின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள். இந்நூலை  எழுதவும் வெளியிடவும் காரணமாக இருந்த வீரகேசரி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. குமார் நடேசன் இத்தகைய  பணிகளை தயக்கமின்றி அடக்கமாக விளம்பரமின்றி செய்து வருபவர். 

மீண்டும் நூலுக்கு வந்தால் இந்நூல் வரலாற்று வரைவியலின் ஒரு புதிய பரிமாணத்தை பிரதிபலிக்கின்றது என்று கூறலாம். வரலாறு என்பது காலங் காலமாக சமூகத்தில் மேல் நிலைப்பட்டோரின் வரலாறாகவே  இருந்து வந்துள்ளது. பிரதானமாக ஆட்சியாளரின் வரலாறே பொது வரலாறாக கூறப்பட்டு வந்துள்ளது. உதாரணமாக இலங்கையில் பண்டைய மன்னர்களின் வரலாறு போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் கால வரலாறு என்றே ஆராயப்பட்டது. தமிழகத்திலும் மூவேந்தர் வரலாறு, சோழர் மற்றும் விஜயநகர மன்னன் வரலாறு என்றே பிரித்தாராயப்பட்டது.

கல்கியின் வரலாற்று நாவல்கள்கூட சோழ அரசர் காலத்து நிகழ்வுகள், அரசுகளுக்கிடையே நிகழ்ந்த போர்கள், அதற்கான ஆயத்தம் வெற்றி கொள்வதற்கான இராஜதந்திரம், சூழ்ச்சி, ஒற்றர் நடவடிக்கை என்பவை பற்றிய மர்ம நாவல்களாகவே அமைந்தன. இந்நாவல்கள் குறிப்பிடும் வரலாற்றுக் காலத்தில் (உதாரணமாக பல்லவர், சோழ மன்னர் ஆட்சிக் காலங்கள்) இருந்த சமுதாய நிலை மக்களின் வாழ்வாதாரங்கள் என சாதாரண மக்களின் சமூக வரலாறு பற்றி எதனையும் அறிந்து கொள்ள முடியாதுள்ளது. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்பது போன்று வரலாறுகளும் ஆட்சியாளர்களை மையமாகக் கொண்டே வரையப்பட்டுள்ளன. 

இவ்வகையில் மலையக தொழிலாளர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் வாழ்வியல் துன்பங்கள், வரலாறாக முறையாக எழுதப்படவில்லை. ஆங்கில ஆட்சிக்காலத்தில் இலங்கை என்ற பொதுத் தலைப்பில் மலையகத்துக்கு வந்து குடியேறிய மக்கள் பட்டதுன்பங்கள் அவர்கள் சுரண்டப்பட்ட வரலாறு என்பன முக்கியத்துவம் பெறவில்லை. இது உலகளாவிய ரீதியில் சகல நாடுகளின் வரலாறுகளுக்கும் பொருந்தும். இவ்வாறான மேல்நிலைப்பட்டோரின் (உடூடிவழூ) வரலாற்றை எழுதும் வரலாற்று வரைவியல் 20 ஆம்  நூற்றாண்டின்  இறுதிவரை நீடித்தது.

தற்போது சடகோபன் அவர்கள் தமது இம்முழு நூலையும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறாக (ண்தஞச்டூவழூணூண ண்வதஞீடிழூண் ஃ டடிண்வணிணூதூ ) படைத்திருப்பது ஒரு புதிய  முயற்சியேயாகும். இவ்விடத்து தை. தனராஜின் "ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி' என்ற நூல் மலையக மக்களின் வரலாற்று ரீதியாக பின்தங்கிய கல்வி நிலை பற்றிய நூல் என்பதும் சு.சந்திரபோஸின் "தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி' ( இது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்டோரைக் குறிப்பது) என்ற நூலும் இவ்வாறான வரலாற்று வகைக்குள் அடங்குவன என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். 

ண்தஞச்டூவழூணூண என்ற சொல் அடிப்படையில் பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்களைக் குறிக்கும். பிற்காலத்தில் இச்சொல் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள் குழுவினரைக் குறிப்பதற்காக பயன்படத் தொடங்கியது. ஏற்கெனவே கூறியதுபோல் எழுதப்பட்ட வரலாறுகள் மேல்நிலைப்பட்டோரின் (உடூடிவழூ)  பணிகளுக்கும் பங்களிப்புகளுக்குமே முக்கியத்துவமளித்தன. காலங்காலமாக வரலாற்று வரைவியலானது இத்தகைய பாணியிலான வரலாற்று எழுத்துப் பணியையே ஊக்குவித்தது. இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறை எழுதும் ஒரு புதிய வரலாற்று வரைவியல் மரபு தோற்றுவிக்கப்பட்டது. சடகோபன் அவர்கள் இம்மரபை பற்றிக்கொண்டு அவ்வழியில் இந்நூலைப் படைத்துள்ளார்.

19 ஆம் நூற்றாண்டில் இத்தாலிய மார்சியவாதியான அன்டோனியோ கிராம்சி (அணவணிணடிணி எணூச்ட்ண்ஞிடி1891ஃ1937 ) என்பார் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு, அடையாளம் என்பன பற்றிய சிந்தனைகளை வெளியிட்டார். இவை பின்னர் ஆங்கில அறிஞர்களால் கருத்திற் கொள்ளப்பட்டன. 1970களில் சமூக வரலாற்றை கீழிருந்து நோக்கும் ஒரு புதிய பார்வை ஆரம்பமாயிற்று. இதில் கிராம்சியின் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. வரலாற்றை உருவாக்குவது உயர் குழாத்தினர் மட்டுமின்றி இதில் சாதாரண மக்களுக்கும் ஒரு முக்கிய பங்களிப்பு உண்டு என வெளிக்காட்டப்பட்டது. மக்களுடைய வாழ்க்கை நிலையையும் பங்களிப்பையும் கருத்திற் கொள்ளாது வரலாறு முழுமையானதாகாது என்று கூறிய இவ்வாய்வாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதற்கு பதிலாக பொது மக்கள் கீழ் மட்ட மக்கள், சலுகை குறைந்த மக்கள், பலவீனமான சமூகப் பிரிவினர் போன்ற சொற்களைக் கையாண்டனர். கிராம்சியின் நோக்கில் ஒடுக்கப்பட்டவர்கள் என்பது கவனிக்கப்படாதவர்கள் அல்லது அலட்சியப்படுத்தப்பட்டவர்கள் என்ற பொருளில் வரும். 

கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுதப்பட்ட வரலாற்றில் மேலோரின் பங்களிப்புக்குத் தான் முக்கிய இடம் வழங்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின்  வரலாறு என்பது வரலாற்றை புதிய நோக்கில் மீண்டும் வரைவதற்கான ஒரு புதிய முயற்சியாகும். இதுவே ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய ஆய்வுகளுக்கான அத்திவாரமாகவும் அமைந்தது. இம் மக்களின் வரலாறு சித்தாந்த ரீதியான ஆய்வாக மட்டுமின்றி ஏழை விவசாயிகள், மந்தை மேய்ப்போர்,தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் பற்றியதாகவும் அமைந்தது. அவர்களும் மனிதப் பிறவிகள், சிந்திப்பவர்கள், தீர்மானங்களை மேற்கொள்பவர்கள் மற்றும் சமூகத்தில் இவ்வாறு வாழ்வது, அதில் தமது பங்களிப்பு என்ன என்பதை பற்றிச் சிந்திப்பவர்கள். இவ்வாறான விடயங்கள் வரலாற்று எழுத்துகளில் கருத்திற் கொள்ளப்படாதவை. உயர் குலத்தவர் போன்று இவ் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது சிந்தனைகளையும் அவலங்களையும் பங்களிப்புகளையும் பற்றி எழுதி ஆவணப்படுத்தி வைக்கவில்லை. கற்றவர்களாக இருந்த உயர் மட்ட சமூகத்தினர் தம்மைபற்றி ஆவணங்களை தயாரிக்க முடிந்தது. இத்தகைய பின் புலத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்று வரைவியல் எழுகின்றது. கிராம்சி அக்காலத்தில் முசோலினிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டார். அவனுடைய சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் தம்மை ஒருங்கிணைத்து முசோலினியின் அரசாங்கத்தை மாற்றிட வேண்டும் என்றார். அவருடைய சிறை வாழ்க்கை பற்றி விரிவாக எழுதினார். அவருடைய எழுத்துகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றிற்கு முன்னோடியாக அமைந்தன.

ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு, அவர் தம் சமூக நிலை, வாழ்வாதாரம் அவர்கள் சந்தித்த அவலங்கள் என்பன பற்றி எழுதுவது சிரமமான  ஒரு பணியாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் ஆய்வுகளின் எழுச்சிக்கான  ஆதாரங்கள் பெரிய அளவில்  கிடைப்பதற்கு இல்லை. அவர்கள் தமது அவலங்களையும் இன்னல்களையும் கோவையாக எழுத்திலோ, வாய்மொழியாகவோ வெளியிட ஆற்றல் அற்றவர்கள் என்பது ஒரு வெளிப்படையான  விடயம். இந்தியாவில்  1980 களில் அமைக்கப்பட்ட தெற்காசிய கலாசார ஆய்வு நிலையம் இந்தியாவில் இப்புதிய  வரலாற்று வøரவியலை அடிப்படையாகக் கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றைப் பற்றி அறியாது முழுமையான வரலாற்றை உருவாக்கிக் கொள்ள முடியாது என்ற அடிப்படையில் உருவான இந்நிலையத்துக்கான வழிக்காட்டியாக அமைந்தவர் ரஞ்சித் குஹா என்ற அறிஞராவார். இவர் 1982ஆம் ஆண்டு பதிப்பித்த ண்தஞச்டூவழூணூண ண்வதஞீடிழூண் என்ற நூல் இவ்வரலாற்றுச் சிந்தனையை உள்ளடக்கிய முதலாவது நூலாகும். விவசாயியானவன் தனது வரலாற்றை தானே உருவாக்குபவன் என்று கூறிய குஹா பிரித்தானியர் கால இந்தியாவின் விவசாயக் கிளர்ச்சிகள் பற்றி ஆராய்ந்தார். இதன் பின்னரே இந்திய சுதந்திரப் போராட்டங்களில் மக்கள் இயக்கங்களின் பங்களிப்பு என்னும் விடயம் ஆராயப்பட்டது. எல்லா போராட்டங்களிலும் கீழ்மட்ட மக்களின் பங்களிப்பு பிரதானமாக இருந்தாலும் அவை பற்றி முறையாக ஆராயப்படாது தலைமைத்துவம் பற்றி மட்டுமே வரலாறுகள் பேசுவதாக இவ்வாய்வாளர்கள் முறைப்பாடு  செய்தனர். சடகோபன் அவர்கள் சமர்ப்பித்துள்ள இவ்வாய்வுடன் மலையக மக்களின் போராட்ட வரலாறு பற்றியும் தனது கவனத்தை திசை திருப்ப வேண்டும். அதனைச் செய்வதற்கான ஆற்றல் அவரிடம் உண்டு என்பது எனது நம்பிக்கை.

நூலாசிரியர் இந்நூலில் தமது இரு பிரதான ஆளுமைகளை பிரதிபலிக்கின்றார். ஒரு புறம் ஒரு ஆய்வாளருக்குரிய  தகவல் தேட்டத்திறன், பகுப்பாய்வுப் பாங்கு, தர்க்க ரீதியான  சிந்தனை என்பவற்றுடன் கூடிய  எழுத்தாற்றல், ஒரு சட்டத்தரணிக்குரிய வாதத்திறன், மறுபுறம் கவிஞர்,  இலக்கியவாதி, பத்திரிகையாளர் என்போருக்குரிய கலையம்சத்துடனும் சமூக நேயத்துடனும் கண்டறிந்தவற்றை தௌ;ளிய அழகியல் உணர்வுடன் வாசகர் படிக்கும் படியான தமிழ் நடை ஆகிய இவை அனைத்தையும் தன்னகத்தே  கொண்ட அத்தியாயங்களாக  கோப்பி கால மக்களின் அவலங்களும் இன்னல்களும் அவரது கைவண்ணத்தில் வரலாற்று வடிவம் பெறுகின்றன.
முறையான ஆய்வாளர்களின் எழுத்து நடைக்கும் ஆய்வேட்டுப் பணிக்கும் சில வரையறைகள் உண்டு. இங்கு உணர்வுகளுக்கு இடமிருக்காது. நிகழ்வுகளுக்கு வியாக்கியானமளித்தல் மற்றும் அவ்வியாக்கியானங்களில் சொந்த முற்கோடல்கள், உணர்வுகள் படியாத மொழி நடையைப் (ஞீடிண்ணீச்ண்ண்டிணிணச்வழூ டூச்ணஞ்தச்ஞ்ழூ) பயன்படுத்துதல் என்பன இவற்றில் முக்கியமானவை. இவ்வியாக்கியானங்கள் முற்றிலும் விஞ்ஞானப் பாங்குடன் அமைதல் பெரிதும் வேண்டப்படுகின்றது. கலையம்சத்துடன் கூடிய இலக்கியப்பாங்கான மொழி நடை ஆய்வேடுகளில் தேவைப்படுவதில்லை. அது வலியுறுத்தப்படுவதுமில்லை. இதனால் ஆய்வேட்டுக் கட்டுரைகள் கட்டுரை இலக்கியம் என்ற வகைப்பாட்டுக்குள் உள்ளடங்கா. ஆய்வேடுகள் இலக்கிய ஏடுகள் என்று எடுத்துக்கொண்டால் இலக்கியப் படைப்பாளிகளின் பெயர் மற்றவர்களை விட சமூகத்தின் கவனத்தைக் கவர விசேட காரணம் உண்டு. இலக்கிய ஏடுகளின் உள்ளடக்கம் சமூகத்துடன் நெருங்கி இருப்பதாலும் அவற்றின் கலைத்தன்மையுடன் சமூகம் ஒன்றிப் போவதாலும் அவை சமூகத்தில் ஆழமாக நிலைபெற்று விடுகின்றன. தொடர்ந்து நினைவு கூரப்படுகின்றன. இவ்வகையில் சடகோபனின் இவ்வெழுத்துகளில் ஆய்வுப் பண்பும் சமூகப்பண்பும் கலைப்பண்பும் ஒருங்கே காணப்படுவது இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

மலையகத் தமிழ் வாசகர்கள் மட்டுமின்றி உலகளாவிய தமிழர்கள் இவ்வரலாற்று நூலுக்கு தமது முழுமையான ஆதரவையும் வரவேற்பையும் வழங்கி சடகோபனின் எழுத்துப் பணிக்கு மேலும் ஊக்கம் வழங்குவார்கள் என்று நம்புகின்றேன்.

பேராசிரியர்  சோ.சந்திரசேகரன் 
கொழும்பு       
23.04.2013
நன்றி : நமதுமலையகம்

No comments: