ஒரு சமூகம் முன்னோக்கிச் செல்லும்போது சற்று பின்னோக்கியும் பார்க்க வேண்டும். தான் இதுவரை காலமும் நடந்து வந்த பாதை; கடந்து வந்த பாதை; அதில் எதிர்நோக்கிய இன்னல்கள்; அவலங்கள் பற்றிய புரிந்துணர்வு என்பன முன்னோக்கிய நடைக்கு உதவும் என்பதால் தான் சமூக வரலாறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வரலாறு என்பதற்கு சுருக்கமான வரைவிலக்கணம் கடந்த காலம் பற்றிய அறிவுத்தொகுதி என்பதாகும். இந்தியாவின் பாதகமான சமூக, பொருளாதார நிலைமைகளால் அங்கிருந்து தள்ளப்பட்ட (கதண்ட ஊச்ஞிவணிணூ) அதேவேளையில், இலங்கையில் திறக்கப்பட்ட பெருந்தோட்டப் பொருளாதாரம் வழங்கிய வாய்ப்புகளாலும் ஈர்க்கப்பட்ட (கதடூடூ ஊச்ஞிவணிணூ) தமிழகத்து பின் தங்கிய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் மலையகப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்தனர். ஆரம்ப கால கோப்பித் தோட்ட வாழ்க்கையில் அவர்கள் பட்டபாடுகள், எதிர்நோக்கிய அவலங்கள், இன்னல்கள், அவமானங்கள், பிரச்சினைகள் என்பன பற்றிய ஆதாரங்களின் உதவியோடு எளிமையான தமிழ் நடையில் தனது மக்கள் பற்றிய அனுதாப உணர்வுடன் கவிஞரும் சட்டத்தரணியுமான இரா.சடகோபன் ஓர் அருமையான, பாராட்டத்தகுந்த நூலை எழுதி வழங்கியுள்ளார்.
இலங்கை வாழ் இந்திய, வம்சாவழியினர் பற்றி ஏற்கெனவே வெளிவந்த சில நூல்கள் (எனது இலங்கை இந்தியர் வரலாறு (1989) உட்பட இவ்விடயம் பற்றி இந்த அளவுக்கு ஆழமாக நோக்கவில்லை. ஆயினும் பேராசிரியர்களான பஸ்தியாம்பிள்ளை, கிங்ஸ்லி டி சில்வா ஆகியோரும் திரு. பாலசிங்கமும் தமது ஆங்கில மொழியிலான ஆய்வேடுகளில் இவ்விடயத்துக்கு ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருந்தனர். அவர்களுடைய அம்மூன்று அத்தியாயங்கள்கூட சடகோபன் எடுத்துக் காட்டும் கோப்பிகால அவலங்களை இந்த அளவுக்கு எடுத்துக்காட்டவில்லை. ஏனெனில் பஸ்தியாம்பிள்ளை பிரதானமாக பார்ன்ஸ் தேசாதிபதி பற்றியும் பாலசிங்கம் பிரௌண்றிக் தேசாதிபதி பற்றியும் கிங்ஸ்லி.சில்வா மிஷனரி அமைப்புகள் பற்றியுமே தமது ஆய்வேடுகளை தயாரித்திருந்தனர். எவ்வாறாயினும் அவர்களுடைய மூன்று அத்தியாயங்களும் ஆங்கில நாட்டில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் துணையுடன் பெருந்தோட்ட மக்களின் அவலங்களைத் தெளிவுபடுத்தின. சடகோபனின் இந்நூல் இம்மக்களின் அவலங்களை நுணுக்கமாக நோக்கும் ஒரு ஆய்வு (ஆடிஞிணூணிண்வதஞீதூ) எனலாம். இத்தகைய ஒரு நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதன் முறை என்பது இதன் சிறப்பம்சம்.