-ரீ.கே.கலாப்ரியா-
ஹைகு பற்றி – ஒரு நண்பருக்குச் சொன்னவை :-
ஹைகுவின் தோற்றம் வளர்ச்சி இவை பற்றிப் பேசும் முன், தமிழ்க் கவிதைப் பரப்பில் அதன் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். பாரதியார்தான் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி அவர் வியக்கிறார். அவர் ஹைக்குவின் அசல்ப் பெயரான ’ஹொக்கு’என்று எழுதுகிறார். கல்கத்தா என்கிறபோது தாகூர் அது பற்றித் தெரியாமல் இருந்திருப்பாரா.தாகூரது ‘Stray Birds’ என்ற அற்புதமான நூலில் ஹைகு சாயலில் பிரமாதமான கவிதைகள் எழுதியிருக்கிறார். அது பற்றிப் பின்னால் காண்போம். நவீன தமிழில் கசடதபற இதழில் ஒரு ஹைகுவை மொழி பெயர்த்துப் போட்டிருந்தார்கள். ரைஸான் எழுதிய அந்தக் கவிதையைப் பின்னால் சொல்லுகிறேன். நான் ஹைகு பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டேன். அந்தப் பாதிப்பில்
“நேரங்கழித்துக் குளிக்கின்றன
மழை பெய்கையில்
மரத்தடியில் சிந்திய மலர்கள்” (1970)
*
”தொலைவில் புணரும் தண்டவாளங்கள்
அருகில்ப் போனதும்
விலகிப் போயின” (1970)
என்றெல்லாம் நானும் எழுதினேன்.
ஹைகு அல்லது ஹொக்கு, முதலில் ’டாங்கா’ என்ற கவிதை வடிவத்திலிருந்து பிறந்தது. அதில் ஐந்து வரிகள் இருக்கும். அது ஒரு போட்டிப் பாடல் போல. முதல் மூன்று வரிகளை ஒருவர் சொல்ல அதை முடித்து வைக்கும் கடைசி இரண்டு வரிகளை இன்னொருவர் சொல்ல வேண்டும். ’டாங்கா’வின் முதல் மூன்று வரிகளை ‘ஹொக்கு’ என்பார்கள். பிற்காலத்தில் இந்த முதல் மூன்று வரிகளே ஒரு அற்புதக் கவிதை வ்டிவமாக நிலைத்து விட்டது. அதனாலேயே ‘ஹொக்கு’ என்பது ’ஹைகு’வாக ஆனதாகவும் சொல்வார்கள். ஹைகுவுக்கென்ற இலக்கணம்: அதில் பதினேழு அசைகள் மட்டுமே இருக்கும்,முதல் மற்றும் கடைசி வரிகளில் ஐந்து அசைகளும்,நடு வரியில் ஏழுமாக மொத்தம் பதினேழு அசைகள் (Syllables). அநேகமாக கவிதையில் ஏதாவது ஒரு பருவம் அல்லது பருவத்தைக் குறிக்கும் ஒரு நேரடிச் சொல், அல்லது பருவத்திற்குரிய பூச்சிகள், பொழிவுகள் போல எப்படியும் ஒரு சொல் இடம் பெற வேண்டும். ஒரு நல்ல ஹைகு வெறும், இயற்கை அல்லது உணர்ச்சி பற்றிய ’வசன வாக்கியமோ’ அல்லது இயற்கைச் சித்திரமோ மட்டுமல்ல, ’மேம்போக்கான பார்வை’க்குத் தென்படாத, இரண்டு வெவ்வேறு விஷயங்களுக்கு இடையேயுள்ள அடையாளத்தைச் சொல்ல வேண்டும். நமக்கு உள்ள வெண்பா, கலிப்பா போன்ற பாவிலக்கணம் மாதிரியான ஒரு விஷயம் இது. அதனால்த்தான் சுஜாதா அடிக்கடி சொல்வார், தமிழில் வருபவை ஒரு வகை குறுங்கவிதைகளே தவிர ‘ஹைகு’ அல்ல, என்று. 70களின் பிற்பகுதியில் இருந்து தமிழில் நிறைய குறும்பாக்கள் வருகின்றன, அதற்கு முன்பே கூட குறள் வெண்பா போல ஏற்கெனவேயும் இருக்கின்றன. தாகூரை இதற்கு முன்னோடியெனச் சொல்லலாம்