இவர் எங்களது சகோதர இனங்களில் ஒன்றான சிங்கள சமூகத்தினைச் சேர்ந்தவர்.
இலங்கைத்தீவில் தமிழ்தேசிய சூழலுக்குள் நான் முன்பு கூறியது போல் எல்லாம் ஒன்று எனக் கூறிக் கொண்டே தமிழ் மக்களுக்குள் ஒரு பகுதியினரை தமிழைப் படிக்கவிடாமல் தடுத்தும் சைவர்கள் என்று சொல்லிக்கொண்டே அவர்களில் ஒரு பகுதியினரை ஆலயத்துக்குள் போகவிடாமல் தடுத்தும் வந்தார்கள். இவ்ஒடுக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் வடஇலங்கையில் 1962ம் ஆண்டளவில் பௌத்த மதத்திற்கு மதம் மாறினர். மாறியவர் 1966ம் ஆண்டளவில் பூநகரி, அல்வாய், கரவெட்டி(கன்பொல்லை), அச்சுவேலி, புத்தூர் ஆகிய இடங்களில் தமிழ் சிங்கள பௌத்த பாடசாலைகளை உருவாக்கினார்கள். இப்பாடசாலைகளில் சிங்களமொழி ஒருபாடமாகவும் பௌத்தமதமும் ஏனைய சமூகவியல், கணிதம், விஞ்ஞானம் தமிழ் போன்ற பாடங்கள் தமிழ் மொழிமூலமும் கற்பிக்கப்பட்டு வந்தன. இப்டி ஒரு பாடசாலைக்கு நாட்டிய நாடக அரங்கக்கல்வியை படிப்பிக்க வந்த ஆசிரியர் தென்னக்கோண். அவர்களிடம் பழகிக் கண்டறிந்த விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்ற முயற்சியாகக்கூட இதனைக் கொள்ளலாம்.
தென்னக்கோண் கன்பொல்லையில் வாழ்ந்த ஆரம்ப காலங்களில் அவருக்கு தமிழ்வராது ஆனாலும் அவர் எங்களது கிராமத்தில் வாழ்ந்த கலைஞர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். நாடகத்திலகம் நற்குணம் அவர்களிடம் தன்னை அறிமுப்படுத்திக் கொண்டு மொழி புரியாமலேயே அவரைப்பாட வைத்து கேட்டுக்கொண்டிருப்பார். இப்படியாக நகர்ந்த நாட்களில் கரவெட்டி அத்துழு அம்மன் கோவிலில் காத்தவராயன் காத்தான் கூத்து பார்ப்பதற்காக என்னையும் அழைத்துச்சென்றார்.
தொடரும்……..
No comments:
Post a Comment