Tuesday, January 31, 2012

"Kærlig hilsen mor" bogudgivelsen i Holbæk

 Kalanithy Jeevakumaran inviterede alle sine venner til at fejre udgivelsen af sin bog 
»Kærlig hilsen..Mor«  lørdag i Holbæk Private Realskoles aula.
Det blev et vaskeægte kulturmøde den 28.01 .2012 på lørdag i Holbæk Private Realskoles aula med tamilske kvinder i sarier i alle regnbuens farver, som lyste op i de mørke nuancer som de danske gæster delte, skriver dagbladet Nordvestnyt.
Kalanithy Jeevakumaran har skrevet bogen »Kærlig hilsen... Mor« der bygger på hendes oplevelser under borgerkrigen på Sri Lanka og som flygtning i Danmark.
Blandt gæsterne var lokale politikere og forfatteren Benny Andersen, som har haft lidt med udgivelsen at gøre.

Thursday, January 26, 2012

சிங்கள நாடக அரங்கம் சில தகவல்கள்

- கரவைதாசன் -

இனத்துப் புனைவுககளின் தொடர்ச்சி, முரண் இவற்றிடையே தொடரும் மாற்றங்களினிடையும் இத்தகவல்கள் என்னை வந்தடைந்ததையும் அதை இன்று நான் நினைவுமீட்டலும் என்னை என் பால்ய வயதிற்கு அழைத்துச் செல்லும் உணர்வினை எனக்குள் பாய்ச்சி நிற்கின்றது. தமிழிலே இன்று பூச்சுத்தப்படுகின்ற மொழி ஒன்று, மதம் ஒன்று, கடவுள் ஒன்று  எல்லாம் ஒன்று என்ற பம்மாத்துக்களிடையே வித்தியாசங்களை கண்டறிந்து பழம் தின்று கொட்டையும் போட்ட ஒரு மூத்த சந்ததி பட்ட அவலங்களைக் கண்டும் கேட்டும் பட்டும் விழிப்புக்கொண்ட அனுபவம் எங்களது, என ஒரு கட்டுரையில் விழித்து தொடங்கியிருந்தேன். இது என்னது எனச் சொல்வதே இங்கு மிகப் பொருத்தமாக இருக்கும். இலங்கைத் தீவிற்குள் தமிழ்க் குறுந்தேசிய அரசியல் தமிழுக்கும் சைவத்திற்கும் முடிச்சுக்கட்டி அக்கருத்தியலுக்குள் தமிழ் மக்களை மசிய வைத்திருக்கின்ற ஒரு போக்கும்,  சிங்கள பெரும் தேசியம் பௌத்தத்திற்கும்  சிங்களத்திற்கும் முடிச்சுக் கட்டி அக்கருத்தியலுக்குள் சிங்கள மக்களை மசிய வைத்திருக்கின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றன. இது இயல் இசை நாடகம் என எல்லாவற்றிக்குள்ளும் கூட இன்று விரவிக் கிடக்கின்றன. இவற்றுள் நாடக அரங்கில்  இதன் வித்தியாசங்களை தொகுத்தறிந்து பொதுத் தன்மைகளை உய்த்தறியும்  ஒருமுயற்சியாக இவ்வெழுத்தினைக் கொள்ளலாம். இவ்முயற்சிக்கு எனக்கு தகவல்களை தந்துதவியவர் எனது கிராமத்தில் நான் கண்டறிந்து பழகிய நாட்டிய நாடக ஆசிரியர் தென்னக்கோண் அவர்கள்.

Wednesday, January 25, 2012

knud vilby fyldte 70 år

Gennem det meste af sit liv har Knud Vilby beskæftiget sig med fattigdom i både udviklingslandene og i Danmark.
Formanden for Socialpolitisk Forening, Knud Vilby, fyldte 70 år i den 24.1.2012
Gennem det meste af sit liv har Knud Vilby beskæftiget sig med fattigdom i både udviklingslandene og i Danmark. Han har i talrige artikler og bøger beskrevet fattigdommens konsekvenser og årsager.
Arbejderens læsere vil fremover møde Knud Vilby fast i avisens spalter.Han har sagt ja til at være med i avisens nystartede socialpolitiske debatpanel. Her vil han først og fremmest beskæftige sig med ulighedsdebatten, som ligger ham meget på sinde.

Thursday, January 19, 2012

ஸ்ரீ லங்கா அரசியலில் சாதி , இனம் , மொழி , மதம் என்பனவற்றின் தாக்கம்

- விக்டர் ஐவன்-

இந்தக் கட்டுரை இன நெருக்கடி மற்றும் அவை சுட்டிக்காட்டும் அவற்றின் உள்ளார்ந்த குறைபாடுகள் என்பனவற்றின் பாரம்பரிய விளக்கங்களின் போதாமைகளை ஆராயும் கருத்தில் எழுதப்படுகிறது.

இந்த பிரச்சினையை இன நெருக்கடிக்கான ஒரு சிகிச்சையாகக் கருதுவதில் தவறேதுமில்லை. இன்னும் எனது கருத்தில் இதை மோதலை அடிப்படையாகக் கொண்ட பெரும்பான்மை சிங்கள சமூகத்துக்கும் மற்றும் ஏனைய சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களிடையே நிலவும் இன வேறுபாடுகளின் அடிப்படையில் மட்டும் சிகிச்சிப்பதற்காக பயன்படுகிறது எனக் கருதுவது தவறு. வேறு விதமாகக் கூறினால், நெருக்கடி நிலைக் காட்சிகள் இன வரிகளுக்கு அப்பால் நீளும் பல்வேறு முகங்களை தழுவியிருக்கிறது.

Sunday, January 15, 2012

ஏன் பொங்கல் வாழ்த்து சொல்லணும் ...

சமூகப் பிரக்ஞை அற்ற இந்த தமிழ் சமூகத்திற்கு நான் ஏன் பொங்கல் வாழ்த்து  சொல்லணும் ? நடிகர் நாசர் பிரக்ஞை பூர்வமான கேள்வி .....

காணொளி  இணைக்கப்பட்டுள்ளது



Wednesday, January 11, 2012

குவாண்டனமோ கரி நாள் இன்று

-கரவைதாசன்-

குவண்டனமோ (Guantánamo) வதைமுகாம் தொடங்கப்பட்ட பத்து ஆண்டுகளின் கரி நாள் இன்று . இந்நாளை அமெரிக்க ஏகாதிபத்தியம் முகாமின் பிறந்த நாளாக வெட்கமின்றி கொண்டாடுகின்றது, இந்த வதை முகாம் அமெரிக்காவிற்கு சொந்தமான கியூபாதீவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

மட்டக்களப்புக்குப் போகையில் மறிக்கப் படுவோரது அடையாள அட்டைகள்
இஸ்ரேலியப்  படையினனிடம் ஒரு பலஸ்தீனியனால் நீட்டப்படுகின்றன...... 

உலகின் எல்லாத் தடுப்பு முகங்களிலும் உள்ளவர்கள்      
ஒரே மொழியில்தான்  இரவில் அலறுகிறார்கள் .....

என்ற  சி. சிவசேகரம் அவர்களின் கவிதை  வரிகளில் குறிப்பெய்தியதுபோல்  இன்றுவரை இந்த வதைமுகாமில் இன்னும் விடப்படாமல் எஞ்சியுள்ள 171 மனிதர்களின் அலறல்கள் பயங்கரவாதிகள் என்ற சுவரின் பின்னால் மறைக்கப்படுகின்றது.

நூலறிமுகம்

காசு  ஒரு பிசாசு
 
சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில், கலையரசன் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளின் தொகுப்பு, "காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்" என்ற நூலாக வெளிவந்துள்ளது. கருப்பு பிரதிகள் அதனை பதிப்பித்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.
நூல் பற்றிய சிறிய அறிமுகம்:

முன்னுரை
2008 ம் ஆண்டு, உலகை உலுக்கிய வீட்டுக்கடன் நிதி நெருக்கடியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில் மையம் கொண்ட நெருக்கடி, ஐரோப்பா ஆசியா எங்கும் பரவியது. வங்கிகள், தொழில் நிறுவனங்கள் திவாலாகின. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அந்த நேரத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த அதிருப்தியும், சந்தை குறித்த விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. அது வரை காலமும் முதலாளித்துவ பொருளாதாரத்தை சிறப்பானதாக கூறிக் கொண்டிருந்தவர்கள், அதன் குறைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள்.

Thursday, January 05, 2012

கசகறணம் பற்றி

நாவல் உரை  -மு.நித்தியானந்தன்-


கசகறணம் என்கின்ற இந்தப்படைப்பு இந்தமொழியைத் தவிர வேறு எந்தமொழியிலும் கூறப்பட்டிருக்கக் கூடாது. இந்நாவலின் மொழியே இந்நாவலின் வெற்றிக்கான முதற்காரணம்.

‘நீங்கள் உயிர்வாழ்வதென்பது உங்களின் உரிமையல்ல. அது உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற சலுகை மட்டுமே’ மேற்படி வசனமானது இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் சொன்னதாக ராஜினி திராணகம தனது நூலில் குறிப்பிட்டது.

மூன்று தசாப்தங்களாக நடந்து கொண்டிருந்த போரியல் வாழ்வின்போது விடுதலைப் புலிகளோ மற்றைய இயக்கங்களோ இலங்கை இராணுவமோ இந்திய இராணுவமோ யாராக இருப்பினும் தங்களின் சுய நலனுக்காக பந்தாடப்பட்டதில் சிதிலமடைந்து சின்னாபின்னமாகிப்போன மக்களுடையதும் மண்ணுடையதும் பதிவுதான் விமல்குழந்தைவேல் படைத்திருக்கின்ற கசகறணம் என்கின்ற நாவல்.

Tuesday, January 03, 2012

சிக்மன் பிரட்டும் கார்ல் மார்க்சும் : தனி மனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்தை நோக்கி..

-மீராபாரதி-

இந்த தலைப்பில் இக் கட்டுரையை – சிறு குறிப்பு எனக் குறிப்பதே பொருத்தமானது – எழுதுவதற்கு முதல் “சிக்மன் பிரட்டும் கார்ல் மார்க்சும்” என கூகுள் இணையத்தளத்தில் தமிழில் தேடினேன். துரதிர்ஸ்டவசமாக ஒன்றும் இருக்கவில்லை. இதன் அர்த்தம் இவர்கள் இருவரையும் இணைத்து தமிழில் ஆய்வு ஒன்றும் நடைபெறவில்லை என்பதாக கருதலாம். ஆனால் இக் குறிப்பிட்ட தேடலை மட்டும் கொண்டு அவ்வாறான ஒரு முடிவுக்கு வருவது அபத்தமானது. நிச்சயமாக யாராவது எழுதியிருப்பார்கள். ஏனனில் இவர்களது பெயரை ஆங்கிலத்தில் எழுதி தேடிய பொழுது பல ஆய்வுகள் நடைபெற்றதை அறிய முடிந்தது.. 80களின் கடைசியில் யாழிலில் இருந்தபோது, கார்ல் மார்க்ஸை ஆர்வமாக ஆனால் மேலோட்டமாக நூனிப் புல் மேய்ந்தேன். இதற்கு குறிப்பிட்ட சிலரின் வழிகாட்டல்களும் இருந்தன. ஆனால் நமது அக்கறை எல்லாம் நடைமுறை செயற்பாடுகளில் இருந்ததனால் இவ்வாறான வாசிப்புகளில் அக்கறை செலுத்தவில்லை. (செயற்பாடுகளில் என்னத்தை செய்து கிழித்தோம் என்பது கேள்விக்குறியே?) மீண்டும் 90களின் ஆரம்பத்தில் எதிர்கால புரட்சியின் கனவை நினைவில் கொண்டு இவ்வாறான புத்தகங்களை கொழும்பில் இருக்கும் பொழுது வாங்கி அழகுபார்த்ததுதான் மிச்சம். ஆனாலும் புலம் பெயரும் பொழுதும் இந்தப் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தது ஒரே ;ஒரு நம்பிக்கையில் தான். அது, மீண்டும் நாட்டிற்கு சென்று புரட்சிகர செயற்பாட்டில் ஈடுபடுவோம் என்பதே. அதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக 90களின் கடைசியில் நம்பி செயற்பட்டுக்கொண்ருந்தபோது, ஒரு புறம் அந்த நம்பிக்கை சிதைவுற்று சென்றது. ஆனால் மறுபுறம் இந்த சிதைவுகளுக்கான காரணங்களை எனக்குப் புரிகின்ற வகையில் (மிகச் சரியாக?) விளக்குகின்ற புதிய வகை சிந்தனை என்னுள் உள்வாங்கப்பட்டதனால் அடிப்படை சிந்தனை மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக, தியானம் தொடர்பான, மிகவும் குறிப்பாக சொன்னால் ஒசோவின் எழுத்துக்களை தவிர்த்து, எல்லாவிதமான வாசிப்புக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். இலங்கையிலிருந்து கொண்டு வந்த புத்தகங்கள் அணைத்தையும் கூட கை(கழுவி) விட்டுவிட்டேன். சில கால இடைவெளியின் பின் மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கின்றேன். இந்த இடைவெளில் பல மாற்றங்கள் நடைபெற்றது மட்டுமல்ல பல தலைப்புகளில் பல படைப்புகள் வெளியாகிவிட்டன. குறிப்பாக இணையத்தளங்களில் பல காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதை, நடைபெற்று வருவதை அறியக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே நிச்சயமாக மார்க்ஸையும் பிரட்டையும் இணைத்தும் ஒப்பிட்டும் பல ஆய்வுகள் விவாதங்கள் தமிழில் வந்திருக்கலாம். அவ்வாறு வந்திருப்பின் அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும்படியும் இக் குறிப்பு அதிக பிரசங்கித்தனமாகவும் ஆழமற்ற பார்வையையும் கொண்டிருந்தால்; ஒதுக்கிவிடுங்கள்;.