Wednesday, December 28, 2011

இணைய தளமொன்றின் உருவாக்கமும் செயற்பாடும்,அச்சு சஞ்சிகையை நோக்கி.........

ந‌ம‌து அர‌சிய‌ல் ச‌மூக‌ம் க‌லை இல‌க்கிய‌ம் பண்பாட்டுத் த‌ளத்தில் ஆயிர‌மாயிர‌ம் இணைய‌த்த‌ளங்கள், blogs உள்ளன‌.இல‌ங்கை,புல‌ம்பெய‌ர்
 நாடுக‌ளிலிருந்து ப‌ல‌ ச‌ஞ்சிகைக‌ள் வ‌ந்து கொண்டிருக்கின்றன‌.அப்ப‌டியான‌ சூழ‌லில் ஏன் இப்ப‌டியான‌ முய‌ற்சிக‌ள் தேவைப்ப‌டுகின்ற‌ன‌ என்ப‌த‌னை முத‌லில் சொல்த‌ல் வேண்டும்.


மிக வெளிப்படையாக பேச வேண்டுமானால் பல்வேறு கருத்து நிலை,பார்வை அணுகுமுறை கொண்ட ஒரு சமூக சூழலில் அதன் அனைத்து தளங்களிலும் மிக அடிப்படையாக இருக்க வேண்டிய பன்மைத்துவ இருப்பிற்கும் அதன் உரிமைக்குமான முக்கியத்துவத்திற்கு கதவடைப்பு செய்து வெகுகாலமாயிற்று. நமது சமூகங்களின் பரப்பில் தொடர்ச்சியாக நிலவுகின்ற இறுக்கமான போக்குகளும் ஒற்றைப்பரிமாண நிறுவுதலும் எதிர் நிலைக்குத் தள்ளும் விமர்சன கதையாடல்களும் பிற போக்குகளை பார்க்க மறுக்கின்ற மேலாதிக்கமும் பகைமுரண்களும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன.





குழுக்க‌ளாக‌வும்,குழுக்க‌ளுக்குள் சிறு சிறு குழுக்க‌ளாக‌வும் த‌னித்த‌னி தீவுக‌ளாக‌வே நாம் உட்ப‌ட‌ அனைவ‌ரும் உள்ளோம்.
நாம் அனைவ‌ருக்கும் இடையிலான‌ திறந்த உரையாடலுக்கான வெளி இன்னமும் எட்டாத துரத்தில் உள்ளதுபோல்தான் தெரிகிறது.தியாகி/துரோகி, நாம்/பிறர்,ஒதுக்கம்,புறக்கணிப்பு,மேலாதிக்கம்,துதிபாடுதல்/தூற்றுதல் என நமது தமிழ் மொழி எழுத்து பண்பாட்டு சிந்தனை சூழல் கீழ்மையான சகதியில் அமிழ்ந்து கிடக்கிறது.

மாற்றுக் கருத்துக்கொண்டோர் பொதுதளங்களில் சந்தித்து கொள்வதில்லை.பல்வேறு கருத்து நிலை கொண்டோர் ஒரு பொதுத்தளத்தில் எழுதி விவாதிப்பதில்லை.அவர்களிடையேயான ஆரோக்கியமான உரையாடல்தளம் வெறுமனே தரிசு நிலமாகவே கிடக்கிறது,அந்த மண்னில் கள்ளிமுற்களும் விசச்செடிகளுமே நீங்கமற விளைந்து கிடக்கின்றன.முற்கற்பிதங்களும் தத்தமது தலையில் சூடியுள்ள கீரிடங்களுமே நாம் உட்பட அனைவருக்கும் முக்கியமானவைகளாக உள்ளன.



ஒவ்வொருவரும் அவரவர் கொண்டுள்ள கருத்து நிலைகளுடன் ,பொதுத்தளத்தில் இணைந்து பணியாற்றக் கூடிய விடயங்களில் கூட்டாக பங்காற்றுதல்.சுயாதீனமாக இயங்குதல்,மாற்றுக் கருத்துக்களை மதித்தல், பன்மைத்துவ ஜனநாயகப் பண்புக்கு முக்கியத்துவமளித்தல் இதுவே நாம் கூட்டாகவும் அதே நேரம் சுயாதீனமாக இயங்குவதற்குமான உடன்பாடுகளாகவும் இருக்கும் என நம்புகிறோம்.


இல‌ங்கை புல‌ம்பெய‌ர் நாடுக‌ளைப் பிர‌தான‌ப்ப‌டுத்தி,முடியுமான‌வ‌ரை எல்லோரும் ஒரு பொதுத்த‌ளத்தில் எழுத‌க்கூடியதாக‌வும்,விவாத‌ங்க‌ளை தொட‌ர‌க்கூடிய‌தாக‌வும் பொதுத்த‌ள‌த்தில் உள்ள வாசிப்பாள‌ர்க‌ளிடையே க‌ற்ற‌லுக்கும் புரித‌லுக்குமான‌ அக‌ன்ற‌ வெளியை விசாலிப்ப‌த‌ற்குமான‌ ஒரு திற‌ப்பு இன்று தேவையாக‌ உள்ள‌து என்ப‌தை ந‌ம‌து ச‌மூக‌ அறிவு கோரி நிற்கிற‌து.

இன்றைய காலகட்டத்தில் நமது அக்கறைக்குரிய விடயங்களில் பிரதானமானவற்றுள் ஒன்றாக‌ நமது எழுத்து பண்பாட்டுத் தளத்திலும் அதிக கவனக் குவிப்பை செய்ய வேண்டியவர்களாக நாம் உள்ளோம். இலங்கைத் தமிழ்மொழி எழுத்துச் சூழல் + புலம்பெயர் தமிழ்மொழி எழுத்துச் சூழலை உள்வாங்கி முக்கியமான எழுத்துக்களை பதிப்பு செய்ய வேண்டிய கடப்பாடு நீண்ட காலமாய் நமக்கு முன் உள்ளது



நவீன அறிவியலின் வளர்ச்சி தொடர்பாடலுக்கும் கருத்துப்பரிமாற்றத்திற்கும் எழுத்துக்குமான சாத்தியப்பாட்டை இன்று அதிகரித்துள்ளது. இதன் வகையில் இணைய சஞ்சிகை பெரும் வளமாக உள்ளது.



பன்மைத்துவ கருத்து தளத்தில் நின்று ஒரு இணைய சஞ்சிகையை முன்னெடுத்து தொடங்கலாம் என திட்டமிடுகிறோம்.இதற்கான ஆரம்ப பணிகள் நடந்து வருகின்றன.கவிதைகள்,சிறுகதைகள்,பத்திகள், அரசியல்,சமூகம், பொருளாதாரம்,பண்பாடு,சினமா மற்றும் அனைத்து துறை சார்ந்த விடயங்களுடன் மாற்றுக்கதையாடல்கள்,மொழிபெயர்ப்புகள் இடம் பெறும்.

எழுதக்கூடிய அனைத்து நண்பர்/ நண்பிகளையும் இத்தளத்தில் எழுதுமாறு கேட்கிறோம். நேர்காணப்பட வேண்டிய சமூக ஆளுமைகளை நேர்கண்டு தறுமாறு கேட்கிறோம். மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய விடயதானங்களை அனுப்பி வைக்குமாறும்,மொழிபெயர்ப்பு செய்யும் ஆற்றலுள்ளவர்கள் செய்து தறுமாறும் வேண்டுகிறோம்.

பரிச்சாத்தமான இந்த முயற்சி கைகூடுமானால் இலங்கை, புலம்பெயர் நாடுகளை இணைத்து அச்சில் சஞ்சிகையை கொணரும் பணியை திட்டமிடுவது பற்றி எதிகாலத்தில் சிந்திக்கலாம்.


எதிர்வரும் ஜனவரி 15ம் திகதியில் இருந்து மாதம் இரு முறையான வெளியீடாக/பதிவேற்றமாக இருக்கும். ஒவ்வோரு மாதத்தின் 10..ம் 25 ம் திகதிகளுக்கு முன்பு விடயதானங்களை அனுப்பி உதவவும்.உங்கள் ஆதரவையும் பங்களிப்பையும் கோருகிறோம்.இத்தகவலை தங்களின் முக நூலின் ஊடாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் ஆர்வமுள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம். ந‌ன்றி

படைப்புகள்,கருத்துக்கள்,தொடர்புகளுக்கு....
email - eathuvarai@gmail.com

No comments: