நமது அரசியல் சமூகம் கலை இலக்கியம் பண்பாட்டுத் தளத்தில் ஆயிரமாயிரம் இணையத்தளங்கள், blogs உள்ளன.இலங்கை,புலம்பெயர்
நாடுகளிலிருந்து பல சஞ்சிகைகள் வந்து கொண்டிருக்கின்றன.அப்படியான சூழலில் ஏன் இப்படியான முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதனை முதலில் சொல்தல் வேண்டும்.
மிக வெளிப்படையாக பேச வேண்டுமானால் பல்வேறு கருத்து நிலை,பார்வை அணுகுமுறை கொண்ட ஒரு சமூக சூழலில் அதன் அனைத்து தளங்களிலும் மிக அடிப்படையாக இருக்க வேண்டிய பன்மைத்துவ இருப்பிற்கும் அதன் உரிமைக்குமான முக்கியத்துவத்திற்கு கதவடைப்பு செய்து வெகுகாலமாயிற்று. நமது சமூகங்களின் பரப்பில் தொடர்ச்சியாக நிலவுகின்ற இறுக்கமான போக்குகளும் ஒற்றைப்பரிமாண நிறுவுதலும் எதிர் நிலைக்குத் தள்ளும் விமர்சன கதையாடல்களும் பிற போக்குகளை பார்க்க மறுக்கின்ற மேலாதிக்கமும் பகைமுரண்களும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன.