Friday, February 26, 2010
1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியின் வரலாற்று முக்கியத்துவம்
- சி.கா.செந்திவேல் -
வரலாற்று நிகழ்வுகள் அவ்வப்போது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகிக்கொள்கின்ற போது அவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமே வரலாற்றுமுக்கியத்துவம் பெறுவதுடன் வரலாற்றுத் திருப்பு முனைகளையும்தோற்றுவித்துக் கொள்கின்றன. அவை தனியே வெற்றிகரமானவைகளாகமட்டுமன்றி தோல்விகளைத் தழுவியவைகள் கூட வரலாற்று முக்கியத்துவம்கொண்டவைகளாகின்றன. அவற்றின் அனுபவங்கள் பட்டறிவுகள் வரலாற்றின்வளர்ச்சிப் போக்கிற்கு பங்களிக்கின்றன. அவற்றின் ஊடே வரலாற்று வளர்ச்சிப்போக்கானது தனக்குச் சாதகமானவற்றை உள்வாங்கியும் பாதகமானவற்றைநிராகரித்தும் கொள்கிறது. இதனை வரலாற்றுணர்வோடு அணுகும் எவரும்எந்தவொரு நிகழ்விலும் கண்டு கொள்ள முடியும்.
அந்தவகையில் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியத்துவம்கொண்டதும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுமான வரலாற்றுநிகழ்வாகவே 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சி அமைந்து கொண்டது. இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழைமையானதும் மனித சமத்துவத்தை மறுத்தஅமைப்பாகவும் கொடுமையானதாகவும் நீடித்து வந்த சாதியத்தின் மீது பெரும்தாக்குதலை அவ் எழுச்சி தொடுத்து நின்றது. ஆனால் அவ்வெழுச்சியை ஒருகனதி மிக்க வரலாற்று நிகழ்வாகவோ அன்றித் தமிழர்களின் சமூக வாழ்வில்இடம்பெற்ற பெரும் திருப்பு முனையாகவோ ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலையேதமிழ்த் தேசியவாதப் பரப்பில் இன்றுவரை காணப்படுகிறது. தமிழ்த் தேசிய வாதவரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும் எந்த ஒருவரும் கூட ஒக்ரோபர் 21 எழுச்சியின் தாக்கம் பற்றியோ அதன் முக்கியத்துவம் பற்றியோ எடுத்துக்கூறுவதில்லை. ஏனெனில் மேட்டுக்குடி உயர்வர்க்க உயர் சாதிய அறிஞர்கள்ஆய்வாளர்கள் எனப்பட்டவர்களே இப்போதும் ஆதிக்க கருத்துப்பரப்புரையாளர்களாக இருந்தும் வருகிறார்கள். இத்தகைய போக்கு இன்றுமட்டுமன்றி வரலாறு முழுவதும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளும்போராட்டங்களும் மறைக்கப்பட்டும் அல்லது திரிக்கப்பட்டும் வந்தனவற்றின்தொடர்ச்சியேயாகும். அந்தவகையில் தான் 1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மீண்டும் மீண்டும்பேசவேண்டியுள்ளது. அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் புதியதலைமுறையினருக்கு அந்நிகழ்வின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் கடமையும் உண்டு.
1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சிக்குத் திட்டமிட்டு நாள் குறித்துக் கொண்டதுசீனசார்பு எனப் பத்திரிகைகளால் சுட்டப்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட்கட்சியேயாகும். அன்றைய பழைய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மாக்சிசலெனினிசப் புரட்சிகரக் கட்சியாக பிளவடைந்து 1964இல் தோற்றம் பெற்றதேமேற்படி கட்சியாகும். தோழர் நா.சண்முகதாசன் மற்றும் சிங்களத் தோழர்கள்தலைமையில் புரட்சிகர வேகத்துடன் வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகத்தில்தொழிலாளர்கள் விவசாயிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அக்கட்சிஅரசியல் தொழிற் சங்க வேலைகளில் ஈடுபட்டு வந்தது. அதன் காரணமாகஅக்கட்சியில் உழைக்கும் மக்கள,; தாழ்த்தப்பட்ட மக்கள் பெருந்தொகையில்அணிதிரள ஆரம்பித்தனர். குறிப்பாக இளைஞர் யுவதிகள்புரட்சிகரமானவர்களாகிக் கொண்டனர். அத்தகைய இளைஞர்களில்ஒருவனாகவே நானும் 1964இல் இப்புரட்சிக் கட்சியில் இணைந்துகொண்டேன்என்பதும் குறிப்பிட வேண்டியதாகும். அன்றைய யாழ் குடாநாட்டு சமூகநிலையில் சாதிய முரண்பாடு கூர்மையடைந்து வந்ததுடன் தாழ்த்தப்பட்ட மக்கள்மீதான, சாதிய தீண்டாமை ஒடுக்குமுறைகள் அதிகரித்தும் வந்தது. அவ்வாறானசூழலிலேயே சாதிய தீண்டாமைக்கு எதிராக மக்கள் போராட்டத்திற்கானஅறைகூவல் விடுப்பதற்கு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்து அதன்பொறுப்பை கட்சியின் வடபிரதேசக் கட்சிக் குழுவிடம் ஒப்படைத்தது. அதன்அடிப்படையிலேயே கட்சியானது 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21ந் திகதியைக்குறித்து சுன்னாகம் சந்தை மைதானத்திலிருந்து ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தைகாங்கேசன்துறை வீதிவழியாக யாழ் நகர் நோக்கி நடாத்தி யாழ் முற்றவெளியில்பகிரங்கக் கூட்டத்தை நடாத்தவும் தீர்மானித்தது. கட்சியும் அதன் கீழான வாலிபர்இயக்கம், தொழிற் சங்க, விவசாய சங்கங்கள் இதற்கான தயாரிப்பில் இறங்கின. பொதுச் செயலாளராக இருந்த தோழர் சண்முகதாசன் உட்பட வேறு சிங்களத்தோழர்களும் கொழும்பிலிருந்து வந்திருந்தனர். யாழ் முற்றவெளிக்கூட்டத்திற்கு ஒளிபெருக்கி அனுமதி கொடுத்த பொலிசார் சுன்னாகத்திலிருந்துஊர்வலம் செல்வதற்கு அனுமதி மறுத்திருந்தனர். இந்த அனுமதி மறுப்பிற்குப்பின்னால் சாதிய ஆதிக்க சக்திகள் இருந்தன. அவ்வேளை ஐக்கிய தேசியக்கட்சியுடன் தமிழரசு - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து அரசாங்கத்தில் அமைச்சர்பதவி பெற்றும் இருந்தனர்.
இருப்பினும் குறித்த நாளன்று பிற்பகல் 4.00 மணியளவில் சுன்னாகம் சந்தைமைதானத்தில் கட்சி வாலிபர் இயக்க, தொழிற்சங்க விவசாய சங்கஉறுப்பினர்கள் ஆதரவாளர்கள் சாதியத்தை விரும்பாத நல்லெண்ணம்கொண்டோர் என மக்கள் திரண்டனர். இறுதி நேரத்தில் கூட பொலிஸ்அதிகாரிகளுடன் பேசியும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆயிரத்திற்கு மேற்பட்டமக்கள் பொலிஸ் தடையை மீறி ஊர்வலம் செல்லத் தயாராக இருந்தனர். அதற்குதலைமை தாங்க கட்சியின் தலைவர்கள் புரட்சிகர தலைமைத்துவ உணர்வுடன்முன்வந்தனர். சுமார் 5.00 மணியளவில் சுன்னாகம் கந்தரோடை வீதியின் சந்தைமைதானப் பகுதியிலிருந்து விண்ணதிரும் முழக்கங்களுடன் புரட்சிகர ஊர்வலம்யாழ் நகர் நோக்கிப் புறப்பட்டது. ~~சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதிஓங்கட்டும்|| என எழுதப்பட்ட செம்பதாகை உயர்த்தி முன்னே எடுத்துச் செல்லஅதன் கீழ் கட்சியின் தலைவர்கள் கம்பீரமாக தலைமை தாங்கி முழக்கமிட்டுமுன் சென்றனர். ஊர்வலத்தினர் சாதியத்திற்கு எதிரானதும் தீண்டாமையையும்எதிர்த்து வௌ;வேறான புரட்சிகர முழக்கங்களை முழங்கி உணர்வும்உத்வேகத்துடன் முன்சென்றனர். அன்றைய ஊர்வலத்தின் முன்னே தோழர்கள்கே.ஏ.சுப்பிரமணியம், வீ.ஏ.கந்தசாமி, டாக்டர் சு.வே.சீனிவாசகம், கே.டானியல், இ.கா.சூடாமணி, டி.டி.பெரேரா, மு.முத்தையா, எஸ்.ரி.என்.நாகரத்தினம் ஆகியோர்சென்றனர். அதற்கு அடுத்ததாக வாலிப இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள்விவசாயசங்கத் தோழர்கள், இளைஞர்கள் அணியாக முழக்கம் இட்டுச்சென்றனர். அன்று சாதியத்திற்கு எதிராக சுன்னாகத்தில் எழுந்த புரட்சிகரஆர்ப்பாட்ட முழக்கங்கள் வடபிரதேசத்தில் கட்டிறுக்கத்துடன் இருந்து வந்தசாதியக் கோட்டை மீது எதிரொலித்தன. அதுமட்டுமன்றி எதிர்வரப் போகும்புரட்சிகரப் போராட்;டப் புயலுக்கான முன்னறிவிப்பாகவும் அவ்வூர்வலம்அமைந்திருந்தது. அத்தகைய உறுதியும் உணர்வும் உத்வேகமும் கொண்டஊர்வலம் சுன்னாகம் பிரதான வீதியில் அமைந்திருந்த பொலிஸ் நிலையத்தைஅண்மித்த போது ஏற்கனவே அணிவகுத்து வீதிக்கு குறுக்கே நின்ற பொலிஸ்படை ஊர்வலத்தின் மீது பாய்ந்தது. காங்கேசன்துறை உதவிப் பொலிஸ்உயரதிகாரி தலைமையிலான பொலிசார் மிக மோசமான குண்டாற் தடிபிரயோகத்தையும் துப்பாக்கிப் பிடிகளிலான தாக்குதல்களையும் நடத்தினர். அவர்கள் மத்தியில் சாதி வெறியுடைய தமிழ்ப் பொலிஸ் அதிகாரிகளும்பொலிசாரும் அதிகமாக இருந்தனர். அவ்வாறு அடிகள் வீழ்வதைஉற்சாகப்படுத்திய சில சாதிவெறியர்களும் சம்பவ இடத்தில் இருந்தனர். முன்தயாரிப்போடும் உள்நோக்கத்தோடும் அவ்வூர்வலத்தின் மீதான பொலிஸ்தாக்குதல் அமைந்திருந்தது என்பதை பின்பான தகவல்கள் மூலம் அறியமுடிந்தது. ஆளும் வர்க்கமும் அதன் பாதுகாவலனான அரசு இயந்திரத்தினது ஒருபகுதியான பொலிசும் அடக்கப்படும் மக்களை எவ்வாறு நடாத்தும் என்பதைதாழ்த்தப்பட்ட மக்கள் நேரடியாகவே கண்டு கொண்டனர்.
சுன்னாகம் பொலிஸ் நிலையம் முன்பாக சாதியை தீண்டாமையை எதிர்த்தஊர்வலத்தின் கட்சித் தலைவர்களிள் தோழர்களின் தலைகளில் இருந்து இரத்தம்வழிந்தோடியது. தோழர்கள் கே.ஏ.சுப்பிரமணியம், வி.ஏ.கந்தசாமி, இ.கா.சூடாமணிஆகியோர் இரத்தம் சொட்டச்சொட்ட மேல் சட்டைகள் கிழிக்கப்பட்ட நிலையில்பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் செல்லபட்டனர். அடிகாயங்கள் பட்டநிலையிலும் கட்சி வாலிப இயக்கத் தோழர்கள் சிதறி பின்வாங்கி ஓடவில்லை. நானும் என்னைப் போன்ற இளம் தோழர்களும் கம்யூனிஸ்ட் ஆகிய பின்முதன்முதல் பொலிஸ் அடியும் காயமும் பெற்றுக் கொண்டமை அதுவாகவேஇருந்தது. அப்போது எனக்கு வயது 23. அவ்வேளை நான் கட்சியின் முழுநேரஊழியனாகிய ஆரம்ப வருடத்தில் வாலிபர் இயக்கத்தில் செயலாற்றிக்கொண்டிருந்தேன். அந்த அடியும் வலியும் எமக்கு புரட்சிகர உணர்வையும்மனவுறுதியையும் தந்துகொண்டது. நாங்கள் தொடர்ந்து ஊர்வலமாக யாழ் நகர்நோக்கிச் செல்வதை வற்புறுத்தினோம். பொலிஸ் அதிகாரிகள் கலைந்துசெல்லும்படி கூறினர். அதனை மறுத்த கட்சி வாலிப இயக்கத் தோழர்கள்அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீண்டும் ஒருதாக்குதலுக்கு பொலிசார் தயாராகினர். ஆனால் ஊர்வலம் செல்வதில்காட்டப்பட்ட மனவுறுதிக்கு முன்னால் பொலிசார் இறங்கிவர வேண்டியதாகவேஇருந்தது. முழக்கங்கள் இடாது யாழ் நகர் நோக்கிச் செல்ல அனுமதித்ததுடன்அதனை கண்காணிக்கவென பெருமளவு பொலிஸ் படையையும் முன்னுக்கும்பின்னுக்கும் பொலிஸ் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்குறிப்பிட்ட தூரம் சென்றதும் ஊர்வலத்தின் எண்ணிக்கை இரட்டைமடங்காகியது. யாழ்நகரை அண்மித்ததும் முழக்கங்களை ஊர்வலத்தில் வந்தமக்கள் இடத்தொடங்கினர். பொலிசாரால் அதனை தடுக்க முடியவில்லை. யாழ்முற்றவெளியில் கொட்டும் மழையிலும் பெருந்தொகையான மக்கள் திரண்டுகொண்டிருக்க பொதுக் கூட்டம் தோழர் டாக்டர்.சு.வே.சீனிவாசகம் தலைமையில்நடைபெற்றது. தோழர் சண்முகதாசன், கே.டானியல், சி.கா.செந்திவேல்ஆகியோர் உரையாற்றினர். தடுத்து வைக்கப்பட்ட மூன்று தோழர்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்குத் தொடர ஏற்பாடு செய்த சுன்னாகம் பொலிஸ் இரவு பத்துமணிக்குப் பின்னே அவர்களை விடுவித்தனர். அன்றைய கூட்டத்தில் தோழர் சண்சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிராக போராட தாழ்த்தப்பட்ட மக்கள்முன்வரவேண்டும் என்ற அறைகூவலை கட்சியின் சார்பாக விடுத்தார். இதுவரைகாலமும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் கொடுக்கும்அடிமைத்தன நிலையை கைவிட்டு அடித்தவனுக்கு திருப்பி அடிக்கும் புரட்சிகரநிலைப்பாட்டை தாழ்த்தப்பட்ட மக்கள் எடுக்க வேண்டும். அதற்கு எமது கட்சித்தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்கும் எனவும் கூறினர்.
அன்றைய ஒக்டோபர் 21 எழுச்சியானது வெறுமனே வாக்குச் சேகரிக்கும்பாராளுமன்ற நோக்குடையதாக அமைந்திருப்பின் அது வரலாற்றுமுக்கியத்துவத்தை பெற்றிருக்க முடியாது போயிருக்கும். ஆனால் தமிழ்மக்களிடையே எப்போதும் மூன்றில் ஒரு பங்கினராக வாழ்ந்து வந்ததாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வந்த சாதியத் தீண்டாமை கொடுமைகளுக்குஎதிரான புரட்சிகர எழுச்சியாக அமைந்தமையானது வரலாற்று திருப்புமுனையாகியது. அவ்வெழுச்சியைத் தொடர்ந்து குடாநாட்டின் பல பகுதிகளிலும்ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் கூட்டங்கள் இடம்பெற்றன. அவற்றில் எல்லாம்கட்சியும் வாலிப இயக்கமும் தெளிவான கொள்கைகளை மக்களுக்கு எடுத்துவிளக்கி வந்தது. கம்யூனிஸ்ட் கட்சியானது சாதிய தீண்டாமைக்கு எதிரானஇயக்கத்தையும் போராட்டத்தையும் வர்க்கப் போராட்ட கண்ணோட்டத்தில்அனுகியது. குறுகிய சாதியவாதக் கண்ணோட்டத்தில் நோக்கவில்லை. சிலகாலத்திற்கு முன்பு தமிழ் நாட்டின் தலித்தியவாதிகள் முன்வைத்த ~~தலித்துகள்மட்டுமே|| என்ற வாதம் அன்றைய சூழலில் குறுகிய சாதிவாதமாகவே கட்சிகண்டுகொண்டது. தமிழ் நாட்டு தலித்திய வாதிகள் தமக்குத் துணையாக தோழர்டானியலின் எழுத்துக்களை தமதாக்கவும் தமது முன்னோடி டானியலே என்றும்உரிமை கொண்டாடிக் கொண்டதையும் நினைவு கொள்ள வேண்டும். ஆனால்உண்மை என்னவெனில் தோழர் டானியல் அன்று தன்னையொரு குறுகியசாதிவாதியாக அன்றி வர்க்கப் போராட்டப் பாதையில் சாதியத்தை எதிர்த்தும்போராடும் பொதுவுடைமைப் போராளியாகவே நிலைப்படுத்தி வந்தார். அவர் ஒருபோதும் பின்வந்த தலித்திய நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்பவராகஇருக்கவில்லை என்ற உண்மை மறைக்கப்படுவது தமிழ் நாட்டு தலித்தியவாதிகளின் திட்டமிட்ட பரப்புரையாகும். டானியல் மீதான பல்வேறுவிமர்சனங்கள் இருந்துவந்த போதிலும் அவர் இறுதிவரை தன்னையொருபொதுவுடைமை வாதியாகவே வெளிப்படுத்தி வந்தார். அவர் 1966ம் ஆண்டுஒக்டோபர் 21 எழுச்சி ஊர்வலத்தில் பங்கு கொண்ட போது புரட்சிகரக்கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேசக் குழு உறுப்பினராக இருந்தார் என்பதேஉண்மை நிலையாகும். அவரது இளமைக்காலப் பொதுவாழ்வின் ஆரம்பம்கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டதன் மூலமும் கட்சியின் முழுநேரஊழியனாகச் சில காலம் செயல்பட்டதன் வாயிலாகவும் அவர்பெற்றஅனுபவங்கள் அதிகமானதாகும் அதனால் அவர் மாக்சிச உலகக்கண்ணோட்டத்தை ஒரு போதும் தலித்தியத்திற்கு அடகு வைக்காதவராகவாழ்ந்தார் என்பதே உண்மையாகும். அத்தகைய தோழர் டானியலை தமிழகத்து - புலம்பெயர்ந்த தலித்திய வாதிகள் எனக் கூறப்படுவோர் தமது குறுகியசிமிளுக்குள் அடைக்க முற்படுவது நேர்மையீனமாகும். உட்கட்சிவிவாதங்களிலும் வெளிவெளியான கருத்து மோதல்களிலும் ஈடுபட்டநேர்மையான எவரும் டானியல் மீதான விமர்சனங்களுக்கு அப்பால் அவரதுசாதியத்திற்கு எதிரான பொதுவுடைமைக் கண்ணோட்ட நிலைப்பாட்டையும்போராட்டப் பங்களிப்பையும் குறைத்து மதிக்கிடவோ மாட்டார்கள்.
ஒக்டோபர் 21 எழுச்சியின் தொடர்ச்சியான பிரசார இயக்கங்கள் ஆங்காங்கேநடைமுறைப் போராட்டங்களாக வெடிக்க ஆரம்பித்தன. அவை தேனீர்கடைப்பிரவேசமாகவும் சமத்துவ வழிபாட்டிற்கான ஆலய பிரவேசமாகவும்முன்சென்றன. இப்போராட்டங்களில் அந்தந்த ஊர் தாழ்த்தப்பட்ட மக்களேமுன்னின்றனர். வெளியிலிருந்து வந்து அவ்வாறான போராட்டங்களில்பங்குகொள்வது ஆதரவான நிலைப்பாடாக கருதப்பட்டதேயன்றிபிரதானமாக்கப்படவில்லை. சில இடங்களில் மக்கள் இளைஞர்களின்உணர்வையும் பலத்தையும் கண்டு சாதிவெறியர்கள் பின்வாங்கினர். ஆனால்சங்கானையில் தேனீர்க்கடை பிரவேசத்தின் போது கடும் வாக்குவாதம்ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சாதி வெறியர்களும் பொலிசாரும் சேர்ந்துநிச்சாமம் கிராமத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர். அதிலிருந்து போராட்டம்வீறுபெற்றதுடன் வடபுலம் பூராகவும் அப்போராட்டத்தின் பொறிகள் வீழ்ந்துகாட்டுத்தீ போன்று பரவத் தொடங்கியது. அப்போது மக்கள் மட்டுமே வரலாற்றின்உந்து சக்தி என்ற உண்மையும் தாழ்த்தப்பட்ட மக்களிடையேயான போர்க்குணமும் வெளிப்பட்ட சூழல் உருவாகியது.
இக்கட்டத்திலேயே புரட்சிகர கட்சியானது சாதியத் தீண்டாமைக்கு எதிரானபோராட்டத்தை உறுதியாகவும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காகவும் உரியகொள்கையை தந்திரோபாயங்களை மேலும் வகுத்து முன்னெடுத்தது. தாழ்த்தப்பட்ட மக்களும் அவர்கள் மத்தியிலான கம்யூனிஸ்ட்டுகள் வாலிபர்கள்என்போர் அடிப்படைப் போராட்ட சக்திகளாக அமைப்பு வாயிலாகஅணிதிரட்டப்பட்டனர். அடுத்து அதற்கு ஆதரவாக அணிதிரளக் கூடிய மனித நேயநல்லெண்ணம் கொண்ட அனைவரும் ஜனநாயக சக்திகளாக அடையாளம்காணப்பட்டனர். அவர்களில் உயர் சாதியினர் என்றழைக்கப்பட்டோர், முஸ்லிம்முற்போக்கு சக்திகள், சிங்கள இடதுசாரிகள் என்போர் இருந்தனர். எனவே ஒருபரந்து பட்ட ஐக்கிய முன்னணியும் அதற்கான அமைப்பும் தேவைப்பட்டது. காலத்தின் தேவையாக அமைந்த இவ்வமைப்பாகவே தீண்டாமை ஒழிப்புவெகுஜன இயக்கம் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு 1967ம் ஆண்டு யாழ் மாநகரசபை மண்டபத்தில் ஒக்டோபர்எழுச்சியின் முதலாவது போராட்டத் தியாகியாகிய சின்னர் கார்த்திகேசுஅரங்கில் இடம்பெற்றது. அம்மாநாட்டிலேயே தோழர் எஸ்.ரி.என் நாகரட்ணம்தலைவராகவும் தோழர் கே.டானியல் அமைப்பாளராகவும் எம்.சின்னையா, சி.கணேசன் இணைச் செயலாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். தோழர்களான (மான்).ந.முத்தையா, டாக்டர்.சு.வே.சீனிவாசகம், கே.ஏ.சுப்பிரமணியம் ஆகியோர் உப தலைவர்களாகத் தெரிவாகினர். இவ்வாறுதோற்றம்பெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் கம்யூனிஸ்ட்களும்அல்லாதோரும் உயர் சாதியினரில் உள்ள ஜனநாயக சக்திகளும் அணிதிரண்டுஇருந்தனர். இத்தகைய நிலை முன்பிருந்து வந்த சாதிய அடையாளச் சங்கமுறைமைகளுக்கு அப்பாலான காலத்தின் வளர்ச்சிக்கும் தேவைக்குரியதுமானஒரு வலுவான ஐக்கிய முன்னணி அமைப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமானது புரட்சிகர கம்யூனிஸ்ட்கட்சியின் தலைமைத்;துவ வழிகாட்டலை ஏற்று செயல்பட்ட ஒரு போராட்டஐக்கிய முன்னணி அமைப்பே யாகும். அதன் தலைவராகப் பொறுப்பேற்ற தோழர்எஸ்.ரி.என் நாகரட்ணம் கட்சி உறுப்பினராக இருக்கவில்லை. அவர்இளவயதிலிருந்தே சாதிய ஒடுக்குமுறை அனுபவத்தால் கம்யூனிஸ்ட்ஆதரவாளராகவே இருந்து வந்தார். அவரது வியாபாரத் தொழில் மூலம் கட்சிக்குநிதிப்பங்களிப்பும் வழங்கி வந்தார். 1964ல் கட்சி பிளவுபட்டவேளை அவர்நடுநிலையில் இருந்தும் வந்தார் அவர் அந்நிலையைக் கடந்து 1966 ஒக்ரோபர்எழுச்சி ஊர்வலத்தில் முதல் தடவையாக கொண்டார். அவரது நேர்மைஅர்பணிப்பு உறுதி என்பன வற்றை அக்காலத்தில் அவருடன் நெருக்கமாகப்பழகியவர்களில் ஒருவனாக இருந்த காரணத்தால் நேரில் காணமுடிந்தது. தோழர் எஸ்.ரி. என். உடனான நினைவுகள் இன்றும் பசுமையானவையாகும். ஆனால் கட்சி வழிகாட்டலை ஏற்று உறுதியுடனும் விட்டுக் கொடுக்காமலும்போராட்டக் களத்தில் நேர்மையாகவும் தலைமை தாங்கிய தோழர் ஆவார். அவரது தலைமைப் பாத்திரம் அன்றைய போராட்டச் சூழலில் மிகப்பெறுமதிவாய்ந்ததாக அமைந்திருந்தது. அவ்வாறே கட்சியல்லாத ஏனையவெகுஜன இயக்கத் தலைமைத் தோழர்களும் இருந்து வந்தனர். சங்கானை, சாவகச்சேரி, கொடிகாமம், அச்சுவேலி, உரும்பிராய், கரவெட்டி, கன்பொலவைமற்றும் சிறு சிறு நகரங்களின் தேனீர்க்கடைகளில் உணவகங்களில்சமத்துவத்திற்கான போராட்டங்கள் இடம்பெற்றன. இவற்றில் சங்கானை - நிச்சாமத்தில் மூன்று பேரும், கரவெட்டி - கன்பொல்லையில் ஒரே நேரத்தில்மூன்று பேரும,; கரவெட்டி கிழக்கில் ஒருவரும,; சண்டிலிப்பாயில் ஒருவரும், அச்சுவேலியில் ஒருவரும், போராட்டத்தின் போது நேரடித் தியாகியாகினர். இவற்றுக்கும் அப்பால் ஐந்து பேர்வரை ஆங்காங்கே சாதிவெறியர்களின்தாக்குதலுக்குப் பலியாகினர். அவ்வாறே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்பிரசித்திபெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் பன்றித்தலைச்சி அம்மன்கோவில் ஆகிய இருபெரும் ஆலயங்களில் மூன்று வருட திருவிழாக்களின்போது ஆலயப் பிரவேசப் போராட்டங்களை முன்னெடுத்தது. அங்கே சாத்வீகவழிமுறைகளும் தேவைப்பட்ட சந்தர்ப்பங்களில் பலாத்கார நடைமுறைகளும்தாழ்த்தப்பட்ட மக்களால் பின்பற்றப்பட்டன. இத்தகைய வெகுஜனப்போராட்டங்களால் இறுதியில் ஆலயக் கதவுகள் திறக்கப்பட்டன. அதன்எதிரொலியாக செல்வச் சந்நிதி கோவில், வல்லிபுர ஆழ்வார் கோவில் உட்படஆங்காங்கே பல கோவில்களின் கதவுகள் கடும் போராட்ட அழுத்தங்களின்ஊடாகத் திறந்து வைக்கப்பட்டன. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்நேரடியாகத் தலையிடாமலே குடாநாட்டின் பல தேநீர் கடைகள் உணவங்கள்ஆலயங்கள் தாழ்த்தப்பட்ட மக்களது சமத்துவத்திற்கு திறந்து விடப்பட்டன. அதுபோராட்டத்தின் பிரதிபலிப்புகளேயாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை வெகுஜன இயக்கமும் 1966ம் ஆண்டுஒக்டோபர் 21 எழுச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்த போராட்டங்கள் தேநீர்க்கடைகள் உணவகங்கள் ஆலயங்களின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கானசமத்துவத்தையும் ஜனநாயக மனித உரிமையையும் வென்று கொடுத்தனர். இவைமுதல் 1971 காலப்பகுதியில் இடம்பெற்றவையாகும். ஆனால் அதற்குமுன்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் சாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்குஎதிராகப் போராட்டங்களோ உரிமைக் கோரிக்கைகளோ இடம்பெறவில்லைஎன்று கூறுவது வரலாற்றை மறுப்பதும் இடம்பெற்ற உண்மைகளை மறைப்பதும்ஆகும். 1920களில் ஆரம்பித்து 30கள் வரை இயங்கி வந்த யாழ்ப்பாண மாணவர் - வாலிப காங்கிரஸ் காலத்தில் சாதிய தீண்டாமைக்கு எதிரான கருத்துக்கள்முன்வைக்கப்பட்டு சமத்துவத்திற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்குமுன்பும் சிறு சிறு அமைப்புகள் தனிநபர்கள் சாதியத்திற்கு எதிராகத் துணிவுடன்எதிர்த்து செயலாற்றி வந்திருக்கின்றனர். ஒவ்வொரு கிராமங்களிலும்தனிநபர்கள் மற்றும் ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் இருந்து வந்தன. அதன் பின்பு 40 களில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை கடும் முயற்சிகளையும்இயக்கங்களையும் தாழ்;த்தப்பட்ட மக்கள் சார்பாக முன்னெடுத்து வந்தன யாழ். நகரத் தேநீர்க் கடைகளிலும் நல்லூர்க் கந்தசாமி கோவில், வண்ணை சிவன்கோவில் போன்றவற்றில் சமத்துவம் பெறப்பட்டமை மகாசபைகாலத்திலேயாகும். அவ்வேளையிலும் கூட பிளவுபடாத கம்யூனிஸ்ட்கட்சியானது மகாசபைக்குப் உறுதியான பின்புலமாக இருந்து வந்தது. மகாசபையின் தலைவராக இருந்து கடுமையாகப் பணிபுரிந்தஎம்.சி.சுப்பிரமணியம் வடபுலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை தோழர்மு.கார்த்திகேசனுடன் இணைந்து கட்டியெழுப்பிய முன்னோடிகளில் ஒருவராகஇருந்தவர். அந்நாட்களில் அவரது பணியும் பங்களிப்பும் மிகக்கனதியானவைகளாகவே இருந்தும் வந்தன ஆனால் 1964ம் ஆண்டின் பின்பானபழைய கம்யூனிஸ்ட் கட்சியானது பாராளுமன்ற பாதையில் வழிநடக்கஆரம்பித்ததுடன் எம்.சியும் அதன் வழியில் செயற்பட்டு தனது முன்னையபங்களிப்பைக் கூட களங்கப்படுத்திக் கொண்டார். இருப்பினும் அவரதுமுன்னைய சமூகப் பங்களிப்பை பின்னைய செயற்பாட்டிற்காக எவரும்மறுக்கவியலாது. அதேபோன்று பின்னைய செயற்பாட்டை நியாயப்படுத்தவும்முடியாது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பான சாதிய தீண்டாமைக்கு எதிரானமுன்னைய இயக்கங்கள் போராட்டங்கள் சாதித்தவைகளை விட 1966ம் ஆண்டுஒக்டோபர் 21 எழுச்சி தோற்றுவித்த சுமார் 5 வருடகாலப் போராட்டங்கள்சாதித்தவை தமிழ்ச் சூழலில் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவையாகும். அது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஆண்டாண்டு கால அடிமைத்தனவாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொண்டது. அதன்அடிப்படையாக அமைந்த காரணி போராட்டத்திற்கான தெளிவுள்ளகொள்கையையும் போராட்ட தந்திரோபாயங்களும் ஆகும். வெகுஜனஎழுச்சிகளையும் மக்கள் பங்குபற்றுதலையும் முதன்மைப்படுத்தி நின்றமைமுக்கியமானதொரு நிலைப்பாடாகும். யாருக்கு சமத்துவம், ஜனநாயகம், மனிதஉரிமை வேண்டியதோ அதே தாழ்த்தப்பட்ட மக்கள் அணிதிரட்டப்பட்டனர். ஐக்கியப்படுத்தப்பட்டு அவர்களே போராட்டத்தில் நடுநாயகமாக ஆக்கப்பட்டனர். அதனால் பரந்து பட்ட போராட்டமாகியது. அதில் இளைஞர்களின் பாத்திரம்முக்கியமானதாக இருந்த போதிலும் அவர்கள் கட்சி வெகுஜன இயக்கம் வாலிபர்இயக்கம் என்பனவற்றின் கொள்கை வழிப்பட்ட கட்டுப்பாட்டுக்குள்ளேயேஇருந்தனர். அத்துடன் ஆயுதங்கள் கையாளப்பட்டமை முக்கிய நடவடிக்கையாஅமைந்தன. அதனால் வெகுஜனப் போராட்டங்கள் சட்ட ரீதியானவையாகவும்சட்டமறுப்பானவையாகவும் விளங்கின. இதனால் பொலீஸ் அடக்குமுறைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து நின்றனர். பொலீஸ் நிலையங்களில்கடும் சித்திரவதைகளை அனுபவித்தனர். நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டனர். இத்தகைய நடவடிக்கைகளால் அன்றைய போராட்டங்களை முறியடிக்கஆயுதங்கள் முடியவில்லை. தேவையின் பொருட்டு பயன்படுத்தப்பட்டபோதிலும் அவை கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டதாக இருந்தது. எந்தவொருகொள்கையும் போராட்டமும் மேலிருந்தோ அன்றி வெளியிலிருந்தோதிணிக்கப்படக் கூடியவையல்ல என்பதையும் அப்படி திணிக்கப்பட்டால் அவைவெற்றிபெற முடியாதவையாகி விடும் என்பதையும் தாழ்த்தப்பட்ட மக்கள்முன்னெடுத்த அன்றைய போராட்டங்கள் எடுத்துக் காட்டின. சில தலித்தியவாதிகள் கூற முற்படுவது போன்று அன்றைய போராட்டங்கள் குறுகியசாதிவாதப் போராட்டமாக இருக்கவில்லை. அதன் பரப்பும் பங்குபற்றியவர்களின்பங்களிப்பும் மிகப் பரந்ததொன்றாகும். ஜனநாயக நல்லெண்ணம் கொண்டஉயர்சாதியினர், எனப்பட்டவர்கள் முஸ்லிம் மக்கள் - இளைஞர்கள், சிங்களமக்கள் அவர்களுக்கிடையிலான புத்திஜீவிகள் என்போர் ஆதரவளித்துபங்கெடுத்தனர்.
அன்றைய ஒக்டோபர் 21 எழுச்சியும் அதன் பாதையில் முன்னெடுக்கப்பட்டபோராட்டங்களும் ஆண்டாண்டு காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த சாதியஅடக்குமுறைமைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் பெருமளவிற்குஉடைத்தெறிந்து கொண்டது. அதற்காக வகுக்கப்பட்ட கொள்கைகளும் போராட்டதந்திரோபாயங்களும் தமிழர்களின் சமூகச் சூழலின் யதார்;த்தங்களில் இருந்தேஉருவாக்கப்பட்டன. இந்திய சூழல்களிலிருந்தோ அல்லது அந்நிய ஆதரவுவேண்டியோ அன்றைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பதுஆழ்ந்து நோக்கத்தக்கதாகும். வெறும் சொல்லாடல்களையும் வீரதீரவசனங்களையும் அல்லது யதார்த்த நிலைமைகளுக்கு அப்பாலானநடைமுறைகளை கைக்கொண்டு அன்றைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவனத்திற்கு உரியதாகும். அதனாலேயே தாழ்த்தப்பட்ட மக்கள்தமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளையும் நிராகரிப்பட்ட சமூக நீதியினையும்வென்றெடுக்க முடிந்தது. அதனால் அவர்களது ஒட்டுமொத்த சமூக அந்தஸ்துஉரிய சமத்துவ இடத்தையும் அடைய நேரிட்டது. தமிழ்த் தேசிய இனம் என்றுபெயரளவில் தானும் தமிழ்த் தேசியவாதிகள் கூறிக் கொள்ளக் கூடிய அளவிற்குஒரு ஐக்கியத் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட சூழல் ஒக்ரோபர் 21 எழுச்சியின்மூலமே உருவாகியது. அதே பாதையில் புதிய சமூக வளர்ச்சிக்கேற்பதொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் சமகால யதார்த்தங்களின் ஊடே புரட்சிகரவெகுஜனப் போராட்ட இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.
தமிழ்;த் தேசிய வாதம் முன்னெடுத்த மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டங்களால் சாதியத்தை மறைக்க முடிந்ததே தவிர அதன் தீவிரத்தையோஅடிவேர்களை அறுக்கவோ முடியவில்லை. இப்போது இந்தியச் சூழலில்காணப்படும் தலித்தியம் என்பதனை இலங்கையில் திணிக்கச் சிலர்முற்படுகின்றனர். ஒரு கொள்கையாக கோட்பாடாக வளர முடியாத தலித்தியம்இந்தியாவில் வாக்குகள் பெறும் பாராளுமன்ற அரசியலுக்கும் பதவிகள்பெறுவதற்கும் அதற்கும் அப்பால் பணம் சேகரிப்பதற்கும் பயன்பட்ட அளவிற்குஇந்தியத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பயன்படவில்லை என்பதே பொதுவானகருத்தாகி வருகின்றது. குறிப்பாகத் தமிழ் நாட்டில் தலித்தியவாதிகள் என்போரின்சீரழிவு மோசமாகி வருவதைக் காணமுடியும். அதே வேளை வர்க்கப் போராட்டஅடிப்படையில் மாக்சிச லெனினிச சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வோடுஇணைந்த போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் அவற்றில்வெற்றிகளையும் கண்டு வருகிறார்கள். அவை பிற குறிப்பான மாநிலங்களில்தீவிர வர்க்கப் போராட்ட வடிவங்களைப் பெற்று வருவதையும்அவதானிக்கலாம். அதே நேரம் தலித் என்ற சொல்லாடலையும் தலித்தியம் என்றசீரழிந்த நடைமுறைகளையும் இலங்கையில் திணிப்பதற்குஎத்தனிக்கப்படுகிறது. இந்தியச் சூழலுக்கு பொருந்தக் கூடியதாக இருக்கும்எதையும் இலங்கை மீது திணிப்பது மிகத் தவறானதாகும். இது பிரதிபண்ணும்போக்கேயன்றி வேறுபட்ட சூழலின் யதார்த்தங்களைப் புரிந்து செயற்படுவதற்குஉரிய ஒன்றல்ல.
எனவே 1966 ஒக்டோபர் எழுச்சியும் அதன் பாதையிலான புரட்சிகரப்போராட்டங்களும் செழுமைமிக்க வரலாற்று அனுபவங்களைகொண்டவையாகும். அவற்றிலிருந்து தோல்வியை தழுவியுள்ள தமிழ்த்தேசியவாதப் போராட்டத்தை முன்னெடுத்த அனைத்துத் தரப்பினருமேபடிப்பதற்கு நிறையவே உண்டு. ஆனால் இத்தனை அழிவுகளுக்குப் பின்பும்அந்தப் பக்கத்தைப் பார்ப்பதற்கு எந்தவொரு தமிழ்த் தேசியவாத தலைமையும்தயாராகவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் தெளிவானவையாகவுள்ளன. ஒன்று, ஒக்டோபர் 21 எழுச்சியானது இடதுசாரி நிலைப்பாட்டில்முன்னெடுக்கப்பட்டதாகும். இரண்டாவது, தமிழர்கள் மத்தியில் உள்ளதாழ்த்தப்பட்ட மக்கள் தமது சொந்தக் கால்களில் நின்று தமது சொந்தத்தலைவிதியை தாமே தீர்மானித்து முன்னெடுக்கப்பட்டதாகும். இவ்விரண்டுகொள்கை நிலைப்பாடுகளும் பழமைவாதத்தின் சகல கூறுகளையும்உள்வாங்கிய தமிழ்த் தேசியவாத சக்திகளுக்கு அரசியல் தீண்டாமையே ஆகும். அரசியலில் அவர்கள் கடைப்பிடித்து வரும் இத் தீண்டாமையை கடக்காதவரைஇலங்கையிலும் அல்லது புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த்தேசிய வாதத்தைமுன்னெடுக்கும் எத்தகைய தலைமைகளாலும் முன்செல்ல முடியாது. அவர்களுக்கு அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைப்பதைத் தவிர வேறுவழியில்லை. அதன் மூலம் பழைமைவாத பிற்போக்கிற்கும் ஏகாதிபத்தியசக்திகளுக்கும் சேவை செய்ய மட்டுமே முடியும். தமிழ் மக்களுக்கு எவ்விதவிமோசனத்தையும் கொண்டுவர மாட்டாது.
ஒக்டோபர் 21 எழுச்சிக்குத் தலைமை தாங்கியவர்களில் ஓரிருவரைத் தவிரஏனையோர் மறைந்துவிட்டனர். அதே போன்று போராட்டக் களங்களில்முன்னின்ற போராளிகளில் குறிப்பிடத் தக்கவர்களே இன்றும் உயிருடன்இருக்கின்றனர். ஏனையோர் மறைத்து விட்டனர். மறைந்த அம்மானிடவிடுதலைப் போராளிகளுக்கு இவ்வேளை நாம் தலைவணங்கி அஞ்சலி நினைவுகொள்கின்றோம். உள்நாட்டிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தோல்வி அவலம்தழுவிய நிலையில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் குறிப்பாகஇளந்தலைமுறையினர் இவ் வெகுஜன எழுச்சியின் ஊடே சமகாலச்சூழலுக்குரியவற்றை கற்றுக் கொள்வது பயன் தருவதாகும்.
இனி இதழ் ஐந்திலிருந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment