- லெனின் மதிவானம் -
தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசுஇ ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம். ஆதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஓர் ஆர்பரிப்பில் உண்மையின்-உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று போராடிய இத்தோழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் இவர் பொறுத்த வெளிவந்த நினைவு மலரைத் தவிர அவர் பொறுத்து காத்திரமான ஆய்வுகள் ஏதும் வந்ததாக தெரியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் எழுதப்பட்டு இசெம்மைப்படுத்தப்பட்ட 'தாயகம்''இசெம்பதாகை'இ புதியபூமி' போன்றவற்றின் ஆசிரிய தலையங்கங்களும் இசில கடிதங்களும் பார்வைக்கு கிட்டின. மேலும் அவரால் வளர் த்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களை கொண்டு அவரை அறிய முடிந்நது. பழமைவாத சமூக புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் நிலைமைகளே யதார்த்தமாகிவிட்டதோர் சூழலில் அவற்றினை மீறி கலப்பு திருமணம் செய்துகொண்டமை அவரது நேர்மையையும் தன்முனைப்பற்ற நாகரிகத்தினையும் எடுத்துக் காட்டுகின்றது. கூடவே தனது இறுதி மூச்சு வரையிலும் அத்தகைய நாகரிகமான வாழ்வை தமதாக்கி கொண்ட அவர் மரண வாயிலில் நின்றுக் கொண்டு கூட தம் தோழர்களுக்கும் அடுத்த தலைமுறையிருக்கும் 'விடை பெறுகிறேன்' கூற முற்பட்ட அவரது செயல் நம்பிக்கையூட்டுவதாக மட்டுமன்று ஒர் உண்மையான இடதுசாரிக்கு இருக்க கூடிய ஆன்ம பலத்தை எடுத்துக் கூறுவதாக அமைத்துள்ளது. அவரது மரண சடங்கில் எந்த விதமான மத சம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார். இன்றுவரை அவரது துணைவியாரின் கழுத்தில் தொங்கும் 'அரிவாளும் இ சம்மட்டியும்' தான் அவர் கட்டிய தாலி.அவரது இல்லமானஅந்தச் சிறிய 'சத்தியமனை' கதவுகள் அற்று 'அடையா நெடுங்கதவும்இ அஞ்சேல் என்ற சொல்லும் வேண்டும் ' என்று சொல்லி திறந்தே இருந்திருகிறது.