அ.மார்க்ஸ்
பரமக்குடியில் சென்ற செப்டம்பர் 13 அன்று ஆறு தேவேந்திர குல வேளாளர்களின் உயிர்களைப் பலிவாங்கிய துப்பாக்கிச் சூடு, தொடர்ந்து அம்மக்கள் மீது மேற்கொண்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ஆகியன முழுக்க முழுக்கக் காவல் துறையினர் அரசு ஆதரவுடன் மேற்கொண்ட ஒரு வன்முறை என்பதை இது தொடர்பான பல்வேறு ஆய்வு அறிக்கைகளும் உறுதி செய்துள்ளன. அ.இ.அ.தி.மு.க தவிர அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இது குறித்து அரசைக் கண்டித்துள்ளன. எதிர்க்கட்சித் தகுதியைச் சட்டமன்றத்தில் பெற்றுள்ள தே.தி.மு.க முதலில் துப்பாக்கிச் சூட்டை ஆதரித்தபோதும் விரைவில் அதுவும் தன் நிலையை மாற்றிக் கொண்டது.
தமிழக அரசு முழுக்க முழுக்கக் காவல் துறை நடவடிக்கையை ஆதரித்தது. வழக்கமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு முதல்வர் காவல்துறையை விட்டுக் கொடுக்காமல் பேசுவது என்கிற நிலையைத் தாண்டி இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் ஆங்காரமாகத் துப்பாக்கிச் சூட்டை அதரித்தார். தேவர் சாதி வெறியர்களால் பழனிக்குமார் என்கிற அப்பாவிச் சிறுவன் கொலை செய்யப்பட்டதையும் கூட அவர் சட்டமன்றத்தில் ஆதரித்துப் பேசினார். முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து எழுதினான், எனவே கொலை செய்யப்பட்டான் என ஒரு முதல்வர் சட்ட மன்றத்தில் பேசுகிறார்